Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 20 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த தென்னாப்பிரிக்கா.. பும்ரா, ஆர்ஸ்தீப் மாஸ் பவுலிங்

அகமதாபாத்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு எதிராக தென்னாபிரிக்க அணி பேட்டிங்கில் தடுமாறியது. லீக் சுற்றில் தோல்வியே தழுவாத இரு அணிகளும் தற்போது சூப்பர் 8 சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சூப்பர் 8 சுற்றில் மொத்தமாக ஒவ்வொரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடும். இதில் ஒவ்வொரு போட்டியுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால் யார் வெற்றியுடன் இந்த சுற்றைத் தொடங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் அகமதாபாத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான எய்டன் மார்க்கரம் மற்றும் நட்சத்திர வீரரான குயிண்டன் டி காக் ஆகியோர் விளையாடினர். இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, அர்ஸ்திப் சிங் ஆகியோர் அபாரமாக கூட்டணி சேர்ந்து அடுத்தடுத்து விக்கெட் வேட்டைகளில் ஈடுபட்டனர்.

ஆறு ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்த ஓவரை அர்ஸ்தீப் சிங் வீச, கேப்டன் மார்க்கரம் நான்கு ரன்களில் அவர் ஆட்டம் இழக்க வைத்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த தருணத்தில் அந்த அணியின் அதிரடி வீரரான ரியான் ரிக்கல்டன் களத்திற்கு வந்தார்.

அவரையும் ஏழு ரன்களில் ஆட்டமிழக்க வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் முதுகெலும்பை இந்திய பவுலர்கள் ஆரம்ப கட்டத்தில் உடைத்து கடும் நெருக்கடிக்கு தள்ளி உள்ளனர். முக்கியமான போட்டிகளில் பும்ரா தன்னுடைய அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி மீண்டும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை தந்திருக்கிறார்.

Story first published: Sunday, February 22, 2026, 19:51 [IST]
Other articles published on Feb 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+