Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் 6 ஓவர்கள்.. மொத்த ஆட்டமும் மாறியது.. இந்திய அணி தோல்விக்கு காரணமே அதுதான்.. சூர்யகுமார் பேட்டி

தென்னாப்பிரிக்கா அணி பவர் பிளே ஓவர்களில் அட்டாக் செய்து ஆடியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், இந்திய அணியின் பேட்டிங் நிறைவுக்கு வந்தது. இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 68 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 56 ரன்களையும் விளாசினர்.

ind-vs-sa-south-africa-played-a-beautiful-cricket-in-the-1-to-6-overs-and-thats-the-reason-for-our

இதன்பின் மழை காரணமாக டிஎல்எஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. ஜடேஜாவின் ஓவரை குறி வைத்து அடிகக் சரியாக திட்டமிட்டு பேட்டிங் வரிசையில் தென்னாப்பிரிக்கா அணி மாற்றம் செய்தது.

அது தென்னாப்பிரிக்கா அணிக்கு சாதகமாக அமைந்தது. அதேபோல் பவர் பிளே ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்தது. இதுவும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

சராசரிக்கும் அதிகமான ஸ்கோரை தான் பதிவு செய்துள்ளோம். ஆனால் தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 முதல் 6 ஓவர்கள் வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதுபோன்ற ஒரு கிரிக்கெட்டை தான் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று பேசி வருகிறோம். தற்போது அந்த கருத்து இன்னும் சத்தமாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளதாக கருதுகிறேன். அதேபோல் இந்த சூழலில் பவுலிங் செய்வதே கொஞ்சம் கடினமான ஒன்றாகும்.

ஆனால் எங்கள் வீரர்களிடம் சாதகமான சூழலில் இருந்து வெளியில் இருப்பதை கூறினேன். வெற்றி, தோல்வியை கடந்து இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் மைதானத்தில் என்ன நடந்தாலும் அதனை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். நிச்சயம் 3வது டி20 போட்டியில் விளையாட ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

Story first published: Wednesday, December 13, 2023, 1:05 [IST]
Other articles published on Dec 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+