Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: "மானமே போச்சு".. வரலாற்றிலேயே மோசமான ஸ்கோர்.. இந்தியாவிடம் அடி வாங்கிய தென்னாப்பிரிக்கா

கட்டாக்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது டி20 வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்து படுதோல்வி அடைந்துள்ளது. கட்டாக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் குவிக்க, இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா வெறும் 74 ரன்களுக்குச் சுருண்டு சரணடைந்தது.

IND vs SA South Africa Registers Lowest T20 Score in History India Clinch Massive 101-Run Victory in Cuttack

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. சுப்மன் கில் 4 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்கள், அபிஷேக் சர்மா 17 ரன்கள் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை, ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா மீட்டனர்.

சிறிது நேரம் நிதானம் காட்டிய ஹர்திக் பாண்டியா, கடைசி நேரத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். 28 பந்துகளில் 59 ரன்கள் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சர் படேல் 23 ரன்கள் சேர்க்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது.

வரலாற்றுச் சரிவு - 74 ரன்னில் ஆல்-அவுட்

176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினர். முதல் ஓவரிலேயே டி காக் (0) அர்ஷ்தீப் பந்துவீச்சில் வெளியேறினார். பவர்-பிளேயில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஸ்டப்ஸ், மார்க்ரம், மில்லர் என நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

டெவால்ட் பிரேவிஸ் (22) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தார். இறுதியில் 12.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களுக்குத் தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷிவம் துபே கடைசி விக்கெட்டை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவின் மோசமான சாதனை

சர்வதேச டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

தென்னாப்பிரிக்காவின் குறைந்தபட்ச டி20 ஸ்கோர்கள்:

74 vs இந்தியா, கட்டாக் (2025)
87 vs இந்தியா, ராஜ்கோட் (2022)
89 vs ஆஸ்திரேலியா, ஜோகன்னஸ்பர்க் (2020)
95 vs இந்தியா, ஜோகன்னஸ்பர்க் (2023)

மேலும், தென்னாப்பிரிக்கா அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இது 6-வது முறையாகும். அதில் 3 முறை இந்தியாவிடம் தான் அந்த அணி படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Wednesday, December 10, 2025, 7:24 [IST]
Other articles published on Dec 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+