Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: டாஸை இழந்த சூர்யகுமார்.. இந்தியா முதல் பேட்டிங்.. பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?

டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை எந்த வீரரும் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், திலக் வர்மா மற்றும் ஆவேஷ் கான் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தொடங்கியுள்ளது. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் முதல்முறையாக மோதுவதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ind vs sa suryakumar yadav hardik pandya

இதனைத் தொடர்ந்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். டர்பன் மைதானத்தில் அதிகளவில் காற்று வீசியதால், சேஸிங் செய்யும் அணிக்கு சாதகம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. அதற்கேற்ப தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் முடிவு செய்துள்ளார்.

இதன்பின் மார்க்ரம் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்கிறோம். இது சிறந்த விக்கெட்டாக தெரிகிறது. இந்த வாரத்தில் அதிகளவில் மழை பெய்யும் என்று கூறியுள்ளனர். அதனால் பிட்சில் ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், அதனை பயன்படுத்தி கொள்ள நினைக்கிறோம். சில வீரர்கள் அறிமுகம் செய்யப்படுவதால், அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் அளிப்போம் என்று தெரிவித்தார்.

பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருந்தோம். இந்த பிட்ச் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதிக ரன்களை விளாசுவோம் என்று நம்புகிறேன். ஓய்வறையில் இருக்கும் வீரர்கள் எனது பணியை எளிதாக்குகிறார்கள். ஐபிஎல் தொடரில் எப்படி அச்சமின்றி விளையாடுகிறார்களோ, அதே ஸ்டைலை இந்திய அணியிலும் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

இந்திய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டரில் திலக் வர்மா வாய்ப்பை பெற்றுள்ளார். அதேபோல் அக்சர் படேல், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி வங்கதேச தொடரில் விளையாடிய வீரர்களே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னாய், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

தென்னாப்பிரிக்கா அணி விவரம்: ரிக்கல்டன், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசன், மில்லர், க்ரூகர், யான்சன், சிமிலானே, கோட்சியே, கேசவ் மஹாராஜ், பீட்டர்

Story first published: Friday, November 8, 2024, 20:27 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+