Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் டாஸை இழந்த சூர்யகுமார் யாதவ்.. 3வது முறையாக இந்தியா முதல் பேட்டிங்.. 27 வயது வீரர் அறிமுகம்

சென்சுரியன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்கர்ம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் வீரர் ரமன்தீப் சிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்சுரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணியும், 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வென்றுள்ளன. இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ind vs sa ramandeep singh klassen

சென்சுரியன் மைதானத்தை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்யவே விரும்புகிறோம். இந்த பிட்ச் நன்றாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சரியான பாதையில் பயணிக்கிறோம். கடந்த போட்டியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

அதேபோல் பேட்ஸ்மேன்கள் இன்னும் கொஞ்சம் நேரம் பேட்டிங் ஆட வேண்டும். பெரிய ஷாட்களுக்கு விரைவாக செல்லாமல், நிதானமாக சூழலை புரிந்து விளையாட வேண்டும். எங்களின் பேட்டிங் யூனிட் மீது முழு நம்பிக்கை உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், மீண்டும் முதல் பேட்டிங் ஆடுவதால் எந்த சிக்கலும் கிடையாது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளிலும் முதல் பேட்டிங் தான் விளையாடினோம். இந்திய வீரர்கள் சிறப்பான திட்டத்துடன் களமிறங்கி செயல்படுத்துகிறார்கள். அதனை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

இந்திய அணியின் இளம் வீரர்கள் எப்போதும் எனது பணியை எளிதாக்குகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவரது இடத்தில் ரமன்தீப் சிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆவேஷ் கான் சிறப்பாக செயல்பட்டாலும், வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், வருண் சக்கரவர்த்தி

தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: ரிக்கல்டன், ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ஸ்டப்ஸ், கிளாசன், மில்லர், யான்சன், சிமிலானே, கோட்சே, மஹாராஜ், சிபம்லா

Story first published: Wednesday, November 13, 2024, 20:23 [IST]
Other articles published on Nov 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+