For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. துணை கேப்டன் அக்சர் பட்டேலை வெளியே உட்கார வைத்த சூர்யகுமார்

அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.

எதிர்பாராத திருப்பம்

டாஸ் நிகழ்வின் போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்த முடிவு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், துணை கேப்டனுமான அக்சர் படேல் இந்தப் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

IND vs SA Super 8 South Africa Opt to Bat First Vice-Captain Axar Patel Dropped in Selection

கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார். இன்றைய போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவதால், உள்ளூர் வீரரான அக்சர் படேல் கட்டாயம் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குவதாக சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார்.இது குறித்துப் பேசிய சூர்யகுமார், "அக்சர் படேல் நீக்கம் குறித்த இந்த முடிவு மிகவும் கடினமானது தான். ஆனால் நாங்கள் கடந்த போட்டியில் விளையாடிய அதே வெற்றி அணியுடன் களமிறங்க விரும்புகிறோம். நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். எனினும், முதலில் பந்துவீசுவதில் மகிழ்ச்சியே. களத்தில் நல்ல ஆற்றலுடன் செயல்பட்டு முடிவுகளை எங்களுக்குச் சாதகமாக மாற்றுவோம்" என்று கூறினார்.

தென்னாப்பிரிக்க அணியில் 4 மாற்றங்கள்

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம், ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். அந்த அணியில் நான்கு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனுக்குத் திரும்பியுள்ளனர்.

ஆடுகளம் எப்படி?

போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் கருப்பு மண்ணால் ஆனது. இது பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 192 ஆக உள்ளது. எனவே ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம். மைதானம் நதிக்கரையில் அமைந்துள்ளதால், இரவில் பனிப்பொழிவு இருந்தால் அது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

இரு அணிகளின் ஆடும் லெவன் விவரம்:

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

தென்னாப்பிரிக்க அணி:

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், கார்பின் போஷ், கேஷவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

Story first published: Sunday, February 22, 2026, 18:42 [IST]
Other articles published on Feb 22, 2026
English summary
IND vs SA : South Africa wins the toss and chooses to bat at Ahmedabad, while India surprises fans by leaving out local star and vice-captain Axar Patel, sticking to the same winning combination from the previous match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+