Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கல.. பேட்டிங்கில் ஹர்திக் மிரட்டிவிட்டாரு.. சூர்யகுமார்

கட்டாக்: தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து இந்திய வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்க அணியை 74 ரன்களில் சுருட்டினர். இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நான் டாஸ் வீசும் போதே சொன்னேன். டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வதா? இல்லை பந்து வீசுவதா என்ற குழப்பம் எனக்கு இருந்தது.

Suryakumar

எனினும் முதலில் பேட்டிங் செய்தது மகிழ்ச்சி. ஒரு கட்டத்தில் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு, 175 ரன்கள் எடுத்தது என்பது உண்மையிலே சிறந்த விஷயம். நாங்கள் 160 ரன்கள் எடுத்தாலே போதும் என்று நினைத்தோம். ஆனால் 175 ரன்கள் எடுத்தது உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

எங்கள் அணியில் 7,8 பேட்டர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சில சமயம் ஒரு வீரர்கள் ரன்கள் அடிக்காமல் போகலாம். அப்போது மற்ற வீரர்கள் அவர்களுக்காக சேர்த்து ரன்களை அடிப்பார்கள். எங்கள் அணியில் அனைவரும் பயமின்றி விளையாட வேண்டும். பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் அணுக வேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன்.

ஹர்திக் பாண்டியா ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. இன்று பந்துவீச்சில் பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியாவை நான் பயன்படுத்தாமல் இருந்ததற்கு காரணம், அவர் இப்போதுதான் காயத்திலிருந்து வந்திருக்கிறார். அதைப்போல் இருவரும் பவர் பிளேவில் பந்து வீச சரியான வீரராக இருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியாவை நான் பயன்படுத்தினேன். இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்தார்கள். ஒரு கேப்டனாக இதுதான் எனக்கு வேண்டும் பந்துவீச்சில் சிவந்தூபே அக்ஷேர் பட்டேல் ஆகியோர் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டி வரும் வியாழக்கிழமை 11ஆம் தேதி சந்திகாரில் நடைபெறுகிறது.

Story first published: Tuesday, December 9, 2025, 22:52 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+