Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- கேப்டனாக மாறியதும் சூர்யகுமார் தடுமாற்றம்.. 4 ரன்களில் அவுட்..10 இன்னிங்சில் இது தான் கதி

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நான்கு ரன்களில் வெளியேறி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

இந்த தருணத்தில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகியும், அபிஷேக் சர்மா நான்கு ரன்களிலும் பெவிலியன் திரும்பியும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனால் இந்திய அணி ஐந்து ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ind vs sa suryakumar yadav hardik pandya

இந்த சூழலில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஒவ்வொரு முறையும் அணி தடுமாறும் போதெல்லாம் சூர்யகுமார் யாதவ் அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். எனினும் சூர்யகுமார் யாதவும் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவருடைய பேட்டிங் முன்பு போல் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இன்னும் சொல்லப்போனால் சூர்யகுமார் யாதவ், அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் தனது கிரிக்கெட்டை இழந்து விடுகிறார். இதனால் சூர்யகுமார் யாதவ் கொஞ்சம் நிதானம் காட்டி விளையாட வேண்டும் என்ற அறிவுரை எழுந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஒரு பத்து முதல் 13 ஓவர் வரை களத்தில் நின்று இருந்தால் நிச்சயம் 50 -60 ரன்கள் அடித்து இருப்பார்.


ஆனால் ஏற்கனவே இந்திய அணி விக்கெட்டுகள் இழந்த உடன் மீண்டும் அதிரடியாக ஆடுகிறேன் என தேவையில்லாத ஒரு ஷாட் அடி 4 ரன்களில் அவுட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் சூர்யகுமார் கடந்த 10 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.


4,21,75 ,8, 29,8,26,58, 3,47 என பத்து இன்னிங்ஸ்களில் சூரிய குமார் நான்கு முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது. இதனால் சூரிய குமார் யாதவ், பேட்டிங்கில், தாம் செய்யும் தவறை திருத்திக் கொண்டு ரன் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

Story first published: Sunday, November 10, 2024, 20:30 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+