IND vs SA- என்னுடைய இடத்துக்கே போறேன்.. சூர்யகுமார் செய்த ஒரு மாற்றம்.. பட்டாசாக தெறித்த மேட்ச்
செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். சாம்சன் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் அவர் தன்னுடைய விக்கெட்டை வீணடித்து வருவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் கடந்த சில போட்டிகளாக சூரியகுமார் யாதவ், மூன்றாவது இடத்தில் களமிறங்கி வந்தார்.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் சூரியகுமார், திலக் வர்மாவை மூன்றாவது வீரராக களம் இறக்கி அவர் நடு வரிசைக்கு திரும்பி விட்டார். இது நல்ல முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சூரிய குமாரி யாதவ் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் நான்காவது வீரராக களம் இறங்கி தான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார். இதுவரை பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக 42 போட்டிகளில் களமிறங்கி 1594 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 46 என்ற அளவில் இருக்கிறது. ஸ்ட்ரைக் ரேட் 170 என்று அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் சூரியகுமாரியாத கடந்த சில போட்டிகளாக மூன்றாவது வீரராக களம் இறங்கி தடுமாறி வந்தார். கடந்த பத்து இன்னிங்ஸில் அவர் நான்கு முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் சூரிய குமார் யாதவ், தற்போது தமக்கு ஏற்ற இடமான நான்காவது இடத்திற்கு சென்று விட்டார்.
இதன் மூலம் திலக் வர்மாவுக்கு இன்று மூன்றாவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிக்க வேண்டிய பந்தை அடித்தும் தேவையில்லாத ரிஸ்க்கான ஷார்ட்டுகளை தவிர்த்தும் அவர் விளையாடி வருகிறார்.
மறுமுனையில் அபிஷேக் ஷர்மா அதிரடி காட்ட இந்திய அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்து நல்ல பலமான நிலையில் இருக்கின்றது. தற்போது நடு வரிசையில் சூரிய குமார் களமிறங்குவதன் மூலம் இந்தியாவின் ஸ்கோர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications