Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: என் மீதும், சுப்மன் கில் மீதும் தான் தவறு.. பேட்டிங்கில் ரன்கள் சேர்க்கனும்- சூர்யகுமார்

சந்திகார்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது t20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் 214 ரன்கள் என்று இலக்கை இந்தியா துரத்தியபோது தொடக்க வீரர் கில், கோல்டன் டக் ஆனார். கேப்டன் சூரியகுமார் வெறும் ஐந்து ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இது குறித்து போட்டி முடிவடைந்த உடன் பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் நாங்கள், முதலில் பந்து வீசினோம். அப்போது ஆடுகளத்தில் நாங்கள் பந்து வீசிய விதம் போதுமானதாக இல்லை. இந்த ஆடுகளத்தில் எந்த லென்த்தில் பந்து வீசுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனினும் இந்த தோல்வியிலிருந்து நாங்கள் பாடம் கற்று முன்னேறி செல்வோம்.

SuryaKumar Yadav

பனிப்பொழிவு நாங்கள் பேட்டிங் செய்யும்போது இருந்தது. ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாங்கள் இரண்டாவதாக ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த மாதிரி போட்டி செல்லவில்லை. இருந்தாலும் பரவாயில்லை நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இது கற்றுக் கொள்ளும் போட்டியாக நாங்கள் பார்க்கின்றோம்.

இரண்டாவது இன்னிங்ஸில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டோம். அடுத்த போட்டியில் நாங்கள், கற்றுக்கொண்ட பாடத்தை சிறப்பாக செயல்படுத்துவோம். நானும் கில்லும் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க வேண்டும். நாங்கள் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்க வேண்டும். எப்போதுமே அபிஷேக் ஷர்மாவை நம்பி எங்களால் இருக்க முடியாது.

அவர் சிறப்பாக தான் பேட்டிங் செய்து வருகிறார். இன்று அவருடைய நாளாக இருந்திருக்காது. நானும் கில்லும் மேலும் சில வீரர்களும் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த சேஸிங்கை கொஞ்சம் புத்திசாலித்தனமாக அணுகியிருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை கில், தனது முதல் பந்திலே ஆட்டம் இழந்து விட்டார்.

அப்படி இருக்கும் போது நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று போட்டியை இறுதிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். கண்டிப்பாக இதிலிருந்து நான் பாடம் கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். கடைசி போட்டியில் அக்சர் பட்டேல் நன்றாக பேட்டிங் செய்தார். இதனால் தான் அவரை இன்று மூன்றாவது வீரராக இறக்கினோம். ஆனால் துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை. இருந்தாலும் அவர் நன்றாக தான் பேட்டிங் செய்தார். இனி அடுத்த போட்டியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என சூரியகுமார் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 11, 2025, 23:32 [IST]
Other articles published on Dec 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+