Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அதுல்ல! டி20 உலககோப்பை பைனல் பார்முலாவை பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த சூர்யகுமார்

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியாவின் டி20 உலக கோப்பை பைனல் பயன்படுத்திய அதே பார்முலாவை செயல்படுத்தி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அது என்ன என்று தற்போது பார்க்கலாம். 220 ரன்கள் என்று வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா துரத்தியபோது மார்க்கோ யான்சன் தனி ஆளாக நின்று 17 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

மார்கோ யான்சன் தொடர்ந்து சிக்ஸர் சிக்ஸராக அடித்து வந்ததால் இந்திய அணி வீரர்கள் பயந்து கொண்டு இருந்தார்கள். குறிப்பாக கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் நின்ற மார்க்கோ யான்சன் வீசிய இரண்டாவது பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடித்தார்.

ind vs sa tilak varma suryakumar yadav hardik pandya

அப்போது சிக்ஸர் லைனில் நின்று கொண்டு இருந்த திலக் வர்மா பந்தை பிடிப்பதற்காக பாய்ந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருடைய தலை மைதானத்தில் மோதியது.
சிறிது நேரம் கையை வைத்து தலையில் வைத்து படுத்துக்கொண்ட பிறகு திலக் வரர்மா மீண்டும் எழுந்து நின்று பில்டிங் செய்தார்.

அப்போது தலையில் அடிபட்டதை ரீப்ளேவில் கண்டுகொண்ட நடுவர்கள் உடனடியாக மருத்துவரை அழைத்து கன்கஸ்ன் டெஸ்ட் நடத்தினார்கள். அதில் திலக் வர்மா சரியாக இருக்கிறார் என தெரிந்தவுடன் போட்டியை தொடங்க நடுவர் முற்பட்டார்.இந்த சூழலில் தான் சூரியகுமார் யாதவ் திடீரென்று ஓடிப் போய் திலக் வர்மாவை பார்த்து வாயை மூடிக் கொண்டு பேசினார். அதற்கு திலக் வர்மாவும் தலையை ஆட்டி ஆட்டி பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவரை அழைத்து தலையில் அடிபட்டு இருக்கிறதா என்று பாருங்கள் என்றும் சூரியகுமார் கூறினார். மருத்துவர் ஓகே சொன்ன பிறகும் சூரியகுமார் யாதவ் திலக் வர்மாவிடம் பேசி நேரத்தை கடத்தினார்.இதன் மூலம் ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்த மார்க்கோ யான்சன் கவனம் சிதறியது.இதனை அடுத்து அடுத்த பந்திலே மார்க்கோ யான்சன் எல் பி டபிள்யு ஆனார்.

நான்கு பந்துக்கு 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது சூரியகுமார் யாதவ் திலக் வர்மாவின் காயத்தை பயன்படுத்தி வேண்டும் என்றே போட்டியை தாமதப்படுத்தியது நல்ல ஒரு யுத்தியாக பார்க்கப்படுகிறது. டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி சென்ற போது ரிஷப் பண்ட், இதேபோன்று காயம் ஏற்பட்டதாக கூறி ஆட்டத்தை தாமதப்படுத்தி கவனத்தை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 14, 2024, 9:03 [IST]
Other articles published on Nov 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+