Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: "கேப்டன்னா இவர்தான் கெத்து!" சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியாவின் அசுர வளர்ச்சி

கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பெற்ற பிரம்மாண்ட வெற்றி, கேப்டன் சூர்யகுமார் யாதவின் தலைமைப் பண்பிற்கு மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது. ரோஹித் சர்மாவுக்குப் பிறகு டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற சூர்யகுமார் யாதவ், இந்திய அணியை தோல்வியே காணாத ஒரு அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளார்.

கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த வெற்றியின் மூலம், டி20 வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் உருவெடுத்துள்ளார்.

IND vs SA Suryakumar Yadav s T20 Captaincy record India s Unstoppable Rise Worries Global Teams

சூர்யகுமார் யாதவ் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணியின் வெற்றிப் பயணம் மலைக்க வைக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா எனப் பெரிய அணிகளை எல்லாம் சர்வசாதாரணமாக வீழ்த்தி வருகிறார்.

சூர்யகுமார் யாதவின் கேப்டன்சியில் இந்தியா ஆடிய தொடர்கள்:

ஆஸ்திரேலியா தொடர்: 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி.
தென்னாப்பிரிக்கா தொடர்: 1-1 என டிரா (தென்னாப்பிரிக்க மண்ணில்).
இலங்கை தொடர்: 3-0 என 'க்ளீன் ஸ்வீப்' வெற்றி.
வங்கதேசத் தொடர்: 3-0 என 'க்ளீன் ஸ்வீப்' வெற்றி.
தென்னாப்பிரிக்கா தொடர்: 3-1 என்ற கணக்கில் வெற்றி.
இங்கிலாந்து தொடர்: 4-1 என்ற கணக்கில் வெற்றி.
ஆசிய கோப்பை: சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியா தொடர் (சமீபத்தில்): 2-1 என வெற்றி.
தற்போதைய தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1-0 என முன்னிலை.

முதல் டி20 போட்டியில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 59 ரன்கள் சேர்த்து பொறுப்பாக ஆடினார். பின்னர் பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தென்னாப்பிரிக்காவை 80 ரன்களுக்குள் சுருட்டி எறிந்தனர்.

பந்துவீச்சாளர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவது, இக்கட்டான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது என சூர்யகுமார் யாதவ் ஒரு முதிர்ச்சியான கேப்டனாகச் செயல்படுகிறார். இந்தத் தொடரையும் இந்தியா கைப்பற்றினால், சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி கிரீடம் இன்னும் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Wednesday, December 10, 2025, 8:19 [IST]
Other articles published on Dec 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+