Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- மாபெரும் 2 சாதனையை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு.. 6 சிக்சர் அடித்தால் போதும்

மும்பை : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதில் முதல் டி20 போட்டி டர்பன் நகரில் நவம்பர் 8ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் சூரிய குமார் யாதவ், தலைமையில் ஹர்திக் பாண்டியா,சஞ்சு சாம்சன்,அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், ஆர்ஸ்தீத் சிங், அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் அறிமுகமாகி தற்போது டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

ind vs sa suryakumar yadav hardik pandya

இதுவரை 74 சர்வதேச t20 போட்டிகள் விளையாடி 2544 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 169.48 ஆகும். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டில் 42 என்ற அளவில் அவருடைய சராசரி இருக்கிறது. 34 வயதான சூரிய குமார் யாதவ், இதுவரை நான்கு சதம் மற்றும் 21 அரை சதம் என சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்து இருக்கிறார்.

அண்மையில் சூரியகுமார் யாதவ் தலைமை ஏற்று இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக முழுமையாக டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான மூன்று இன்னிங்க்ஸில் சூரியகுமார் யாதவ் 112 ரன்கள் அடித்து இருந்தார். இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு டி20 போட்டிகளில் மொத்தமாக 107 ரன்கள் அடித்தால் ஒரு சாதனையை மேற்கொள்வார்.

தற்போது சூரியகுமார் யாதவ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏழு சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி 346 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 175 ஆகும். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் ஒரு சதம்,நான்கு அரை சதம் அடித்திருக்கிறார். தற்போது இரு அணிகளுக்கும் இடையே அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் 452 ரன்கள் உடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த சூழலில் சூரியகுமார் யாதவ் 107 ரன்கள் அடித்தால் அவர் முதலிடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சூரியகுமார் யாதவும் இந்த தொடரில் 6 சிக்ஸர்கள் அடித்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். முதல் டி20 போட்டி நவம்பர் 8ஆம் தேதியும், இரண்டாவது t20 போட்டி நவம்பர் 10ஆம் தேதியும், மூன்றாவது t20 நவம்பர் 13ஆம் தேதியும் ,நான்காவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Story first published: Thursday, November 7, 2024, 18:21 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+