Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீர்ந்தது இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்சினை.. மிரட்டல் காட்டிய 3 பேர்.. இனி எப்போதும் அதிரடி தான்!

இந்திய அணியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மிடில் ஆர்டர் பிரச்சினைக்கு இன்று விடிவுகாலம் பிறந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஓப்பனிங்கே அதிரடி

ஓப்பனிங்கே அதிரடி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிரடி தான். இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் ஜோடி 5 ஓவர்களில் 51 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 48 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். ருதுராஜ் கெயிக்வாட் 15 பந்துகளில் 23 ரன்களை அடித்து வெளியேறினார்.

திடீர் சர்ஃபரைஸ்

திடீர் சர்ஃபரைஸ்

அதிரடியாக தொடங்கிய இந்திய அணியில் வழக்கம் போல மிடில் ஆர்டரில் ரன்ரேட் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு தான் ட்விஸ்ட்டே இருந்தது. இஷான் கிஷான் விட்டுச்சென்ற அதிரடியை முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் காட்டினார். 27 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசினார்.

Recommended Video

Hardik Pandya-க்கு ஏன் கேப்டன் பதவி இல்லை? ரசிகர்கள் கேள்வி | *Cricket
அதிரடி பார்ட்னர்ஷிப்

அதிரடி பார்ட்னர்ஷிப்

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி, தென்னாப்பிரிக்க பவுலிங்கை நாளாபுறமும் சிதறடித்தனர். முழுக்க முழுக்க சிக்ஸர், பவுண்டரிகள் மட்டுமே வந்துக்கொண்டிருந்தன. இருவரும் பவர் ஹிட்டர்ஸ் என்பதால் ரன்ரேட் மலமலவென உயர்ந்தது. பண்ட் 16 பந்துகளில் 29 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்களையும் குவித்தனர்.

 மிடில் ஆர்டர் பிரச்சினை

மிடில் ஆர்டர் பிரச்சினை

இவர்களின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து நாட் அவுட்டாக களத்தில் இருந்தார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் ஆகியோர் இருந்ததற்கே இந்திய அணி படு பலமாக காட்சியளித்தது. இதில் தினேஷ் கார்த்திக்கும் உடன் இருப்பதால் இனி டாப் ஆர்டரில் சொதப்பினால் கூட மிடில் ஆர்டரில் வழிநடத்த 3 பவர் ஹிட்டர்களின் காம்போ அமைந்துள்ளது.

Story first published: Thursday, June 9, 2022, 21:38 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+