Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப கஷ்டம் தான்.. இந்திய அணியின் ப்ளேயிங் 11.. சீனியர் கொடுத்த முக்கிய தகவல்!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

India's T20 and Test Squad Talking Points என்ன? | Aanee's Appeal | IND vs SA | IND vs ENG | #Cricket

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது.

சொந்த மண்ணிலேயே நடைபெறும் இந்த போட்டி வரும் ஜூன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி முடிவடைகிறது.

இந்திய அணி

இந்திய அணி

இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அணி முழுவதும் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக சீனியர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11ல் குழப்பம்

ப்ளேயிங் 11ல் குழப்பம்

ஆனால் இதில் இருந்து ப்ளேயிங் 11-ஐ தேர்ந்தெடுப்பது தான் சிரமமான விஷயம். ஏனென்றால் இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ஓப்பனிங்கிற்கு வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட் உள்ளனர். இவர்கள் தவிர்த்து மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கும் இருக்கிறார். எனவே ப்ளேயிங் 11 எப்படி அமையப்போகிறது என்ற குழப்பம் உள்ளது.

ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில் அளித்துள்ளார். அனைவரும் இஷான் கிஷான் ஓப்பனிங் ஆடுவார் என நினைக்கலாம். ஆனால் கீப்பர்கள் அதிகமாக இருப்பதால், ருதுராஜ் கெயிவாட்டிற்கு தான் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

சீனியர் புறக்கணிப்பு

சீனியர் புறக்கணிப்பு

மிடில் ஆர்டரை பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடாவிற்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. இதே போல துணைக்கேப்டன் என்ற முறையில் ரிஷப் பண்ட் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற முறையில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுவிடுவார்கள். இதனால் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டர் உறுதியாகிவிடும். எந்த பிரச்சினையும் இருக்காது. தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இருக்காது எனக்கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் கணிப்பு

ஆகாஷ் சோப்ராவின் கணிப்பு

கே.எல்.ராகுல், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்

Story first published: Monday, May 23, 2022, 20:04 [IST]
Other articles published on May 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+