Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி பொறுத்துக்க முடியாது.. பைனலில் சிவம் துபேவை நீக்குங்கள்..மாற்று வீரராக அதிரடி வீரருக்கு வாய்ப்பு

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் மோசமாக செயல்படும் வீரர்களின் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் சிவம் துபே முக்கிய வீரராக இருக்கிறார்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடியதால், இவரை நம்பி இந்திய அணி வாய்ப்பு கொடுத்தது.

ஆனால், சிவம் துபே முக்கிய கட்டத்தில் காலை வாருவது மட்டுமல்லாமல் இதுவரை எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சிஎஸ்கே அணியில் இவர் எப்படி சிறப்பாக விளையாடினார் என்று தெரியவில்லை என்று தற்போது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

t20 world cup ind vs eng shivam dube

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில்இந்திய அணி விளையாடி தடுமாறிக் கொண்டிருந்தது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்து ஆட்டம் இழந்தார். அப்போது பத்து பந்துகளுக்கு மேல் எஞ்சி இருந்தது. இதில் சிவம் துபே குறைந்தது 2 சிக்சராவது அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,அவர் எதிர்கொண்ட முதல் பந்தலே கோல்டன் டக் ஆனார்.

இதனால் சிவம் துபே, இறுதிப் போட்டியில் வைத்து விளையாடுவது தேவையற்ற ஒன்று என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். துபே, கடந்த சில போட்டிகளாக ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை. இதனால் தேவையில்லாத ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ் ஆகத்தான் சிவந்துபே இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.இதே போன்று இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உடைய தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிவம் துபே கண்டிப்பாக தடுமாறுவார்.

இதனால் அவர்களுக்கு எதிராக ஏற்கனவே நன்றாக விளையாடி அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு வீரரை கொண்டு வருவதன் மூலம் அவர் எடுத்த உடனே சரியாக விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் சிவம் துபே தமக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு எல்லாம் வீண் அடித்து விட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகின்றார். தென்னாப்பிரிக்கா போன்ற பலம் வாய்ந்த பந்துவீச்சு உடைய அணியை எதிர்கொள்ளும்போது கூடுதலாக பேட்ஸ்மேன்கள் இருப்பது முக்கியமாக கருதப்படுகிறது. இதனால் ரோஹித் சர்மாவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

Story first published: Friday, June 28, 2024, 7:30 [IST]
Other articles published on Jun 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+