IND VS SA டி20 தொடர்- இந்தியாவுக்கு சவால் அளிக்கும் 4 தென்னாப்பிரிக்க வீரர்கள்.. விவரம் இதோ
டெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்க அணி நேற்றே பயிற்சியை தொடங்கியது.
டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி, டி20 போட்டியில் பங்கேற்கிறது. இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய 4 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

தப்ரைஸ் சாம்ஷி
பந்துவீச்சாளர்களுக்கான சர்வதேச டி20 தரவரிசையில் தப்ரைஸ் சாம்ஷி முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள சாம்ஷி, இந்தியாவுக்கு எதிரான தொடரில் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரபாடா
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடிய ரபாடா, நடப்பு சீசனில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ரபாடா நடப்பு சீசனில் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்துவீசினார். இந்த ஐபிஎல் அனுபவம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரபாடாவுக்கு கைக் கொடுக்கும். இதனால் ரபாடா பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

டேவிட் மில்லர்
நடந்து முடிந்த சீசனில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் டேவிட் மில்லர். குஜராத் அணியின் ஃபினிஷராகவும், ஆட்டத்தை கட்டமைத்து அதிரடியாக ரன் குவிக்கும் வீரராகவும் டேவிட் மில்லர் திகழ்ந்தார். நடப்பு சீசனில் 481 ரன்கள் விளாசிய மில்லர், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்.

குயின்டன் டி காக்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய குயின்டன் டி காக் 508 ரன்கள் குவித்தார். இதில் அதிகபட்சமாக 140 ரன்கள் விளாசினார். தற்போது செம பார்மில் உள்ள டி காக், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அடி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து போல் அமையும்.


Click it and Unblock the Notifications