Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய ஆயுதமும் போச்சே.. டிக்காக் கொடுத்த டிப்ஸ்.. இந்தியாவை சமாளிக்க தென்னாப்பிரிக்கா செம ப்ளான்!

டெல்லி: இந்திய அணியை சமாளிப்பதற்காக தென்னாப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டிக்காக் முக்கிய டிப்ஸை கொடுத்துள்ளார்.

Recommended Video

IND vs SA T20 Series: Indian Team-ல் 3 முக்கிய பிரச்சனைகள் | #Cricket | OneIndia Tamil

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்த தொடர் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணி

இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அணியை சமாளிப்பதற்காக தென்னாப்பிரிக்க அணி மிகவும் பலமான படையுடன் இந்தியாவுக்குள் களமிறங்கியுள்ளது. ஐபிஎல்-ல் கலக்கிய டிக்காக், மில்லர், எய்டன் மர்க்ரம், வாண்டர் டுசன், வெயின் பார்னெல், மார்கோ யான்சன், டுவைன் பிரிட்டோரியஸ் என நட்சத்திர படை ஒன்று சேர்ந்துள்ளது.

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

ஸ்பெஷல் ட்ரெய்னிங்

இந்நிலையில் இந்திய அணியை சமாளிக்க ஸ்பெஷல் பயிற்சி ஒன்று எடுத்து வருகின்றனர். அதாவது சொந்த மண்ணில் இந்திய அணியை சமாளிப்பது மிகவும் கடினம். இதற்கு காரணம் இங்குள்ள சுழற்பந்துவீச்சு பிட்ச்கள் தான். வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியுள்ள அணிகள், இந்திய களத்தில் சுழற்பந்துவீச்சு களத்தில் தோல்வியுடன் வெளியேறுவார்கள். எனவே தங்களது முதல் நாள் பயிற்சியை ஸ்பின்னர்களுக்கு ஒதுக்கியுள்ளனர் தென்னாப்பிரிக்க வீரர்கள்.

3 முக்கிய வீரர்கள்

3 முக்கிய வீரர்கள்

டாப்ரைஸ் சாம்சி, கேசவ் மகாராஜ் ஜோடி நீண்ட நேரமாக சுழற்பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதில் மற்றொரு சுவாரஸ்யமாக எய்டன் மர்க்ரமும் திடீரென களத்திற்குள் சென்று சுழற்பந்துவீச்சில் பயிற்சி எடுத்தனர். எனவே இந்த 3 ஸ்பின்னர்களும் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் வலைப்பயிற்சியில் நல்ல பவுன்சர்களை வீசுகிறார். இதே போல பவுலிங் புயல் வெயீன் பார்னெல் 5 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

Story first published: Saturday, June 4, 2022, 11:45 [IST]
Other articles published on Jun 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+