Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து.. தென்னாப்பிரிக்கா பயன்படுத்த போகும் ஆயுதம் இது தான்!

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி என்று பலம் வாய்ந்த இந்தியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் இரு அணிகளும் தோல்வியை தழுவாமல் விளையாடுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தென்னாப்பிரிக்கா சமாளிப்பதற்காக ஒரு திட்டத்தை தீட்டி இருக்கிறது.

அது என்ன? இதை சமாளிக்க இந்தியாவிடம் பதில் இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம். இந்த தொடரில் இந்தியா சிறந்த பேட்டிங் படையை கொண்ட அணியாக விளங்குகிறது. தென்னாப்பிரிக்காவை பொருத்தவரையில் அவர்களுடைய பந்து வீச்சு தான் அந்த அணிக்கு கை கொடுத்திருக்கிறது.

t20 world cup ind vs sa virat kohli

இந்த சூழலில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு ஷார்ட் பாலை எதிர்கொள்ள திணறுவார்கள். ஷார்ட் பாலை போட்டாலே அதை அடிக்க முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறி விடுவார்கள். குறிப்பாக ரிஷப் பந்த், சிவம் துபே, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஷார்ட் பால் பிரச்சனையாகவே இருக்கிறது.

இந்த நிலையில் ஷார்ட் பாலை அடித்து ஆட ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் புல் சாட்டை பயன்படுத்துவார்கள். ஆனால் புல் ஷாட் சில சமயம் பவுண்டரி லைனில் கேட்ச் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவின் டாப் வரிசை வீரர்களை ஷார்ட் பாலை போட்டு திணறடிக்க தென்னாப்பிரிக்கா திட்டம் தீட்டு இருக்கிறது. இந்த ஷார்ட் பாலை எதிர்கொள்வதற்கு இந்திய அணி பிரத்தேக பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருக்கும். பந்து பேட்டிற்கு அவ்வளவு வேகமாக வராது. இதனால் இந்த ஆடு களத்தில் ஷார்ட் பாலை வீசுவது பெரிய அளவில் கை கொடுக்காது என்றும் ஒரு கருத்தும் நிலவுகிறது. இதனால் ஷார்ட் பால் குறித்து கவலைப்படாமல் இந்திய வீரர்கள் தைரியத்துடன் விளையாடினால் நிச்சயம் ரன்கள் கிடைக்கும்.தென் ஆப்பிரிக்கா வீரர்களின் வேகத்திற்கு ஆடுகளம் சாதகமாக இருக்குமா இல்லை தோய்வாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பேட்டிற்கும், பந்திருக்கும் நடக்கப்போகும் யுத்தத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Story first published: Saturday, June 29, 2024, 8:31 [IST]
Other articles published on Jun 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+