Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. தென்னாப்பிரிக்க தொடரை நம்பியே எதிர்காலம்..தப்பிக்குமா தலை

டெல்லி: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது,

இதற்காக இரு அணி வீரர்களும் டெல்லியில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர், டி20 உலக கோப்பையில் இடம்பெறும் வீரர்களை தீர்மானிக்கும் தொடராக பார்க்கப்படுகிறது,

அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலின் எதிர்காலமும், இந்திய அணியின் எதிர்காலமும் இந்த தொடரை நம்பி தான் இருக்கிறது.

சொதப்பிய ராகுல்

சொதப்பிய ராகுல்

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பிசிசிஐ ராகுலை தான் கருதுகிறது. ஆனால் கேப்டன் பதவிக்கு ராகுல் கொஞ்சமும் சரிப்பட்டு வர மாட்டார் என்று விமர்சகர்களும், ரசிகர்களும் குற்றஞ்சாட்டினர். காரணம், ஐபிஎல் தொடரிலும் சரி, இதற்கு முன்பு நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரிலும் சரி கேப்டனாக சொதப்பினார்.

ராகுல் பேட்டிங் குறை

ராகுல் பேட்டிங் குறை

மேலும் கேப்டன் பதவி, ராகுலின் பேட்டிங் திறனையும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை ராகுல் அடித்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 42 பந்துக்கு 50 ரன்கள் அடித்துவிட்டு, அதன் பின்னர் 7 பந்துகளில் 20 ரன்கள் அடிக்கிறார் ராகுல்.

முக்கிய தவறு

முக்கிய தவறு

இது, அவருடைய ஸ்கோர் அதிகரிக்க மட்டும் தான் சாதகமாக இருக்குமே தவிர, அணியின் வெற்றி வாய்ப்புக்கு ஆப்பு வைத்துவிடும்.கேப்டன் சுமையால் தான் ராகுல் பேட்டிங் பின்னடைவை சந்தித்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்களும் குறிப்பிட்டனர். மேலும், ஆட்டத்தின் போது எந்த வீரருக்கு எந்த சமயத்தில் ஓவர் கொடுப்பது என்பதிலும் ராகுல் சொதப்புகிறார்.

ராகுல் எதிர்காலம்

ராகுல் எதிர்காலம்

ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் ராகுலை பட்டை தீட்டினாலும், அவரே ராகுலின் செயல்பாடு குறித்து மைதானங்களில் கோபப்பட்டதை பார்த்து இருக்கலாம். இதனால், தென்னாப்பிரிக்கா தொடர் தான் ராகுலுக்கு கேப்டனாக கடைசி வாய்ப்பு என்றும், இதில் அவர் சொதப்பினால் இனி கேப்டன் பதவிக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படாது என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் கேப்டனாக முதல் டெஸ்ட், முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார். டி20யிலாவது வெற்றியுடன் தொடங்குவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Wednesday, June 8, 2022, 17:48 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+