Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த பையன் பார்க்க சாதாரணமா தெரியல.. எழுதி வச்சுக்கோங்க.. 15 வருஷம் இந்திய அணிக்கு ஆடுவான்.. பதான்!

ஜோகன்னஸ்பர்க்: தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணிக்காக குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை விளையாடுவார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 16.4 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

IND vs SA : Tamilnadu Player Sai Sudharsan will play for India for the next 10 to 15 years says Irfan Pathan

இந்த போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி முதல் தமிழ்நாடு வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் சாய் சுதர்சனின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று அனைவரையும் எளிதாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்ததோடு, பந்துக்கு ஏற்றவாறு கால்களை நகர்த்தி விளையாடியது காண்போரை பிரமிக்க வைத்தது. இளம் வயதிலேயே சாய் சுதர்சனின் ஃபூட் வொர்க் மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

சாய் சுதர்சன் பற்றி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பேசுகையில், தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் இவ்வளவு சிறப்பாக ஒரு இளம் வீரரால் பேட் செய்ய முடிகிறது என்றால், இந்திய அணிக்காக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு ஆட கூடிய வீரரை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நிச்சயம் ஒரு போட்டியில் எந்த வீரரையும் முழுதாக அறிந்து கொள்ள முடியாது. ஆனால் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தொடங்கினார்.

ஷார்ட் பால்களை நன்றாக எதிர்கொள்கிறார், கால்களை நகர்த்தி விளையாடும் திறமையை கொண்டுள்ளார், வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடுகிறார், ஃபிரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட்டில் விளையாட தெரிகிறது, ஸ்பின்னர்களை ஸ்வீப் ஷாட் ஆடுகிறார், ஒருவேளை வேகப்பந்துவீச்சாளர் ஸ்லோயர் பால்களை வீசினால் ஸ்டப் டவுன் செய்து பந்தை விளாச தெரிகிறது. இதன் மூலம் அவர் கிரிக்கெட்டை நன்றாக புரிந்து கொண்டுள்ளார் என்பது தெரிகிறது என்று பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, December 18, 2023, 17:47 [IST]
Other articles published on Dec 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+