
50 ஓவர் அணி
இந்தியாவின் டெஸ்ட் அணியை மட்டும் அறிவித்த பிசிசிஐ, ஒருநாள் அணியின் அறிவிப்பை தள்ளிப்போட்டது. கடந்த ஒருமாத காலமாக விஜய் ஹசாரே தொடர் நடைபெற்று வந்ததால் அதில் சிறப்பாக விளையாடும் வீரர்களையும் அணிக்குள் சேர்க்க திட்டங்கள் போடப்பட்டிருந்தன. அதன்படி விஜய் ஹசாரே தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

தமிழக வீரர் கம்பேக்
இந்நிலையில் நாளைக்குள் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. இதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படவுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடிய அஸ்வின், அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். ஆனால் தற்போது டி20 உலகக்கோப்பை, நியூசிலாந்து தொடர், தென்னாப்பிரிக்க தொடர் என அடுத்தடுத்து கலக்கி வருகிறார்.

கூடுதல் ஸ்பின்னர்
இவர் மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு யுவேந்திர சஹாலும் கம்பேக் கொடுக்கவுள்ளார். விஜய் ஹசாரே தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை பெற்ற சஹால் தற்போது வாய்ப்பு பெற்றுள்ளார். காயத்தினால் பாதிக்கப்பட்ட அக்ஷர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் உடற்தகுதி இன்னும் நிரூபிக்கப்படாமல் இருப்பதால் சஹால் தான் வாய்ப்பு பெறுவார்.
Recommended Video

இளம் வீரர்களின் வருகை
பேட்டிங்கை பொறுத்தவரையில் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. விஜய் ஹாசாரேவில் ருதுராஜ் கெயிக்வாட் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி அசத்தியிருந்தார். இதே போல வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கெத்து காட்டி வருகிறார். இதனால் இவர்கள் 4 பேரும் அணிக்குள் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications