Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ரோகித் முதல் டி20 உலககோப்பையில் விளையாடிய போது, நான் பள்ளியில் படித்தேன்- பவுமா பேச்சு

ராய்ப்பூர்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை ராய்ப்பூரில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு திரும்பிருக்கிறார். இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரோகித் சர்மா உடன் நாங்கள் விளையாடி இருக்கின்றோம்.

Temba Bavuma

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை என நினைக்கின்றேன். தென்னாப்பிரிக்காவில் நடந்த அந்தத் தொடரில் ரோஹித் சர்மா விளையாடிக் கொண்டிருந்தபோது நான் பள்ளியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தேன் இன்னும் ரோகித் சர்மா விளையாடி வருகிறார். ரோஹித், கோலி இருவரும் எவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்று இதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வீரர்களின் வருகை மூலம் இந்திய அணி பலமாக மாறி இருக்கிறது. நான் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கின்றேன். இந்த இரண்டு வீரர்களும் எந்த அணிக்கு சென்றாலும், அந்த அணி கண்டிப்பாக அவர்களுடைய அனுபவம் திறமை மூலம் பலம் பெறும்.

இந்த விஷயம் எங்களுக்கு கண்டிப்பாக தெரியும். அவர்கள் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். ரோகித் சர்மாவும், விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் முதல் போட்டியில் எங்களுக்கு எதிர்மறையான முடிவு அமைந்துவிட்டது. இந்த தொடரில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நல்ல நேரங்களை அதிகம் பார்த்து இருக்கின்றோம்.

தற்போது, இந்தியாவும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மார்க்கோ ஜான்சன் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டுலுமே கலக்கி வருகிறார். எனக்கு தரவரிசை பற்றி தெரியவில்லை. ஆனால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே அவர் டாப் 10 இடத்திற்குள் இருப்பார் என்று நினைக்கின்றேன். அவருடைய இந்த செயல்பாடு எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது என்று பவுமா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 2, 2025, 21:40 [IST]
Other articles published on Dec 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+