For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்விக்கு காரணம் இது தான்.. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு அதிர வைத்த தென்னாப்பிரிக்க வீரர்!

Recommended Video

INDIA VS SOUTH AFRICA 2ND T20 | INDIA WINS | இந்தியா வென்றது, தென்னாப்பிரிக்கா காலி!

மொஹாலி : தோல்விக்கு தானே பழியை ஏற்றுக் கொண்டு அதிர வைத்துள்ளார் 49 ரன்கள் அடித்த டெம்பா பவுமா.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் குவித்தது. 150 ரன்கள் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் எட்டியது இந்தியா.

விளக்கம்

விளக்கம்

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேட்டியில் விளக்கம் அளித்த டெம்பா பவுமா, தான் சரியாக ஆடாதது தான் காரணம் எனக் கூறி பழியை தானே ஏற்றுக் கொண்டார். அவர் 49 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் ஏன் தோல்வியை ஏற்றுக் கொண்டார்?

விளக்கம்

விளக்கம்

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேட்டியில் விளக்கம் அளித்த டெம்பா பவுமா, தான் சரியாக ஆடாதது தான் காரணம் எனக் கூறி பழியை தானே ஏற்றுக் கொண்டார். அவர் 49 ரன்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் ஏன் தோல்வியை ஏற்றுக் கொண்டார்?

டி காக் - பவுமா ஜோடி

டி காக் - பவுமா ஜோடி

தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அந்த அணிக்கு டி காக், டெம்பா பவுமா சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

டி காக் அவுட்

டி காக் அவுட்

டி காக் - பவுமா ஜோடி 57 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தது. அப்போது நவ்தீப் சைனி பந்துவீச்சில் டி காக் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது தென்னாப்பிரிக்கா 11.2 ஓவரில் 88 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது.

தடுமாறத் துவங்கியது

தடுமாறத் துவங்கியது

அதுவரை போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென்னாப்பிரிக்கா அதன் பின் தடுமாறத் துவங்கியது. விக்கெட்களை இழந்ததோடு, ரன் ரேட் மேலே செல்லாமல் தத்தளித்தது. பவுமா ரன் குவிக்க முடியாமல் திணறினார். நிறைய டாட் பால்கள் ஆடினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஒரு கட்டத்தில் 180 ரன்கள் வரை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 150 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது. விராட் கோலி 72, தவான் 40 ரன்கள் அடிக்க இந்திய அணி எளிதாக வென்றது.

180 ரன்கள் குவிப்போம்

180 ரன்கள் குவிப்போம்

இந்த தோல்வி குறித்து பேசிய பவுமா, 13வது ஓவரில் நாங்கள் வலுவான நிலையில் இருந்தோம். பாதி போட்டியின் போது நாங்கள் 180 ரன்கள் குவிப்போம் என்று நினைத்தேன். அது நல்ல ஸ்கோர் ஆக இருந்திருக்கும் என்றார்.

பழியை ஏற்றுக் கொண்டார்

பழியை ஏற்றுக் கொண்டார்

என் மீது தான் பழி சொல்ல வேண்டும். என்னால் அந்த வேகத்தை முன்னே எடுத்துச் செல்ல முடியவில்லை. மற்றவர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால் அவர்கள் அடிப்பார்கள் என நான் நினைத்தேன் என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டார் பவுமா.

பேட்டிங்கில் தோல்வி

பேட்டிங்கில் தோல்வி

12வது ஓவரில் இருந்து 16வது ஓவர் வரை, நாங்கள் பேட்டிங்கில் தோல்வி அடைந்தோம். அப்போது எங்கள் வேகத்தை காட்டி இருந்தால், நாங்கள் நிச்சயம் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

டெஸ்ட் வீரர் பவுமா

டெஸ்ட் வீரர் பவுமா

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மூன்று அறிமுக வீரர்களுடன் களமிறங்கியது. அதில் ஒருவர் தான் டெம்பா பவுமா. அவர் டெஸ்ட் வீரர் என்றே அறியப்படுபவர். நிதான ஆட்டத்துக்கு பெயர் போன அவரை தென்னாப்பிரிக்க அணி டி20 அணியில் சேர்த்துக் கொண்டதும் கேள்விக்கு உள்ளானது.

ஏன் தேர்வு செய்யப்பட்டார்?

ஏன் தேர்வு செய்யப்பட்டார்?

எனினும், அவர் உள்ளூர் டி20 தொடரில் அதிரடியாக ஆடினார் என்பதை கணக்கில் காட்டி, அவரை அணியில் சேர்த்துள்ளது தென்னாப்பிரிக்கா. அவர் தன் முதல் டி20 போட்டியிலேயே 43 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

Story first published: Thursday, September 19, 2019, 20:26 [IST]
Other articles published on Sep 19, 2019
English summary
IND vs SA : Temba Bavuma took the blame on himself for the 2nd T20 loss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+