“ச்சோ.. வேகத்தில் வளைந்த கால்கள்” வலியில் துடி துடித்துப்போன ஜஸ்பிரித் பும்ரா.. கவலையில் ரசிகர்கள்!
செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ ரசிகர்களை "ஐயோ.. எப்படி தாங்கினார்" என முகம் சுளிக்க வைத்துள்ளது.
Recommended Video
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களை சேர்த்துள்ளது.

3வது நாள் ஆட்டம்
2ம் நாள் ஆட்டம் மழையினால் முற்றிலும் ரத்து செய்யப்பட்ட சூழலில் இன்று 3ம் நாள் ஆட்டம் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வேகமாக ரன்களை குவிக்க முயன்ற இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுடன் ஆல் அவுட்டானது.

அச்சுறுத்திய பும்ரா
இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா தொடக்கத்திலேயே சர்ஃப்ரைஸ் கொடுத்தார். அவரின் ஸ்விங் பந்தில் சிக்கி தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் 1 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும் பும்ரா அச்சுறுத்தலாக இருந்தார். அவர்கள் மீது அதிக அழுத்தங்கள் ஏற்பட்டன.

பும்ராவுக்கு காயம்
இந்நிலையில் தான் பும்ராவுக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டத்தின் 11 ஓவரை வீச வந்த ஜஸ்பிரித் பும்ரா அனைத்து பந்துகளையும் 140+ கிமீ வேகத்தில் வீசினார். அப்படி பட்ட வேகத்தில் பந்துவீசிய பும்ராவின் கால்கள் திடீரென தடுமாறின. வலதுகாலின் பாதம் திடீரென நகர்ந்து சுளுக்கியது. இதனால் களத்திலேயே பும்ரா நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டார்.

பரவும் வீடியோ
அவரின் நிலையை பார்த்த இந்திய அணியின் மருத்துவர் குழு பும்ராவை களத்தில் இருந்து வெளியே அழைத்துச்சென்று சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் தற்போது பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் "ஐயோ" என முகம் சுளித்து வருகின்றனர். எனினும் பும்ராவுக்கு பெரிய காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரிவிக்கபப்டவில்லை. தற்போதைக்கு முழு பொறுப்பும் முகமது ஷமி மற்றும் சிராஜ் மீது விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications