மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது 32 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஐந்தாவது வீரராக களத்திற்கு வந்த திலக் வர்மா பேட்டிங்கில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 62 ரன்கள் சேர்த்தார்.
இதில் 5 சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். கடைசிவரை நின்ற திலக் வர்மா 19.1 வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். திலக் வர்மா கூட மேலும் ஒரு வீரர் அதிரடியாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். ஒருவேளை இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கலாம்.

இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும் போது நெருக்கடியில் பல வீரர்கள் ஆட்டம் இழந்து வருகின்றனர். ஆனால் திலக் வர்மா மட்டும் நெருக்கடியை அபாரமாக சமாளித்து சேஸிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார். இப்படித்தான் ஆசிய கோப்பை இறுதி போட்டியிலும் திலக் வர்மா அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்த சூழலில் டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மாவின் சேஸிங் ரெக்கார்ட் கோலியை போலவே இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அணிகளுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் சேஸிங்கில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் திலக் வர்மா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
விராட் கோலி 2013 ரன்கள் அடித்து, 67 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ள நிலையில், திலக் வர்மா 518 ரன்களை சேஸிங்கில் அடித்து பேட்டிங் சராசரியை 64.75 என்ற அளவில் வைத்துள்ளார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் சேஸிங் செய்யும் போது இரட்டை இலக்க ரன்களை தொடர்ந்து 11 முறை திலக் வர்மா அடித்திருக்கின்றார்.
விராட் கோலி 2010 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 25 முறை சேஸிங்கில் இரட்டை இலக்கம் ரன்களை எட்டிய நிலையில் திலக் வர்மா 11 முறை எட்டியுள்ளார். இதேபோன்று திலக் வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பேட்டிங் சராசரியை 66.16 என்று அளவில் வைத்திருக்கிறார். இதிலும் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் திலக் வருமா இருக்கின்றார். விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக 70.28 என்ற அளவில் பேட்டிக் சராசரி வைத்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக கோலி 67.80 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ள நிலையில் திலக் வர்மா இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.