For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ!

Recommended Video

கேப்டன் விராட் கோலியை கோவப்பட வைத்த ஸ்ரேயாஸ் ஐயர்-வீடியோ

மொஹாலி : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த இரண்டு காரியங்கள் கேப்டன் விராட் கோலியை கோபம் கொள்ளச் செய்தது.

இரண்டு முறையும் கோலி கோபம் அடைந்தார். அதை வெளிப்படுத்தவும் செய்தார். அதில் ஒரு காட்சி வீடியோவாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த பவுமாவுடன் ஜோடி சேர்ந்து, டி காக் ரன் குவித்து வந்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அவர்களை பிரிக்க கேப்டன் விராட் கோலி போராடி வந்தார். அப்போது பத்தாவது ஓவரை ஹர்திக் பண்டியா வீசினார். இரண்டாவது பந்தை பவுமா எதிர்கொண்டார். பந்தை அடித்த அவர் ஒரு ரன் ஓடினார்.

அந்த சம்பவம்

அந்த சம்பவம்

பந்தை பீல்டிங் செய்ய வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர், தடுமாறி பந்தை எடுத்து வீசுவதற்குள் இரண்டாவது ரன்னை ஓடினார் பவுமா. பதற்றத்தில் பந்தை சற்று தள்ளி வீசி விட்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.

மூன்று ரன்கள்

மூன்று ரன்கள்

அந்த இடத்தில் ஹர்திக் பண்டியா பந்தை பிடித்து இருக்க வேண்டும். ஆனால், அவரும் பந்தை பிடிக்காமல் விட, ஓவர் த்ரோ ஆனது. பவுமா மூன்றாவது ரன்னையும் ஓடி விட்டார்.

கோபம் கொண்ட கோலி

இதைக் கண்ட கேப்டன் கோலி கடும் கோபம் கொண்டார். ஓவர் த்ரோ ஆன பந்தை பெற்ற கோலி, ஸ்டம்புகளை தகர்த்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கோலியை கோபம் கொள்ள வைத்த இன்னொரு சம்பவமும் உள்ளது.

இந்தியா சேஸிங்

இந்தியா சேஸிங்

தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் குவித்தது. அடுத்து இந்திய அணி 150 ரன்கள் இலக்கை சேஸிங் செய்து வந்தது. ரோஹித் சர்மா 12, தவான் 40, ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயாஸ் பேட்டிங்

ஸ்ரேயாஸ் பேட்டிங்

அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். அவர் கோலிக்கு பேட்டிங் ஸ்ட்ரைக் கொடுத்து ஆடி வந்தார். அபாரமாக ஆடிய கோலி அரைசதம் கடந்தார். அப்போது 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

ஸ்ரேயாஸ் செய்த காரியம்

ஸ்ரேயாஸ் செய்த காரியம்

17வது ஓவரின் கடைசி பந்தை சந்தித்த கோலி, பந்தை தட்டி விட்டு, இரண்டு ரன் ஓட முயன்றார். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன் ஓடி முடித்த பின், திரும்பி கோலியை பார்க்காமல் தன் முதுகை காட்டிக் கொண்டே நின்று விட்டார்.

முமுகத்தை காட்டிய கோலி

முமுகத்தை காட்டிய கோலி

இதைக் கண்டு மீண்டும் ஸ்ரேயாஸ் மேல் கோபம் கொண்டார் கோலி. அவர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. எனினும், அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக் பெற்ற கோலி, முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

கோலி கடைசி வரை களத்தில் நின்று 72 ரன்கள் குவித்தார். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஸ்ரேயாஸ் ஐயர் தப்பினார். ஒருவேளை இந்தியா இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தால் கோலி தன் கோபத்தை போட்டி முடிந்த பின்னரும் காட்டி இருப்பார்.

Story first published: Thursday, September 19, 2019, 14:04 [IST]
Other articles published on Sep 19, 2019
English summary
IND vs SA : Two incidents trigger Virat kohli to get anger over Shreyas Iyer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+