Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா டீமை விட்டு தூக்குங்க.. சவால் விட்ட தமிழக வீரர் வருண்.. மீண்டும் வெறித்தனமான பவுலிங்

டர்பன்: இந்திய டி20 அணியில் நீண்ட காலத்திற்கு பின் இடம் பெற்று நான்கு போட்டிகளில் ஆடி இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் தனது சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்தார்.

இந்த போட்டியில் அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 25 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே அவரது சிறந்த சர்வதேச டி20 பந்து வீச்சு ஆகும். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகளில் ஆடி இருந்த வருண் சக்கரவர்த்தி அதில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

ind vs sa india south africa 20

தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இந்திய டி20 அணியில் மீண்டும் இடம் பிடித்த பிறகு நான்கு போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இதன் மூலம் அவரை இந்திய அணியில் இருந்து அத்தனை எளிதில் நீக்கிவிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதற்கு முன் வருண் சக்கரவர்த்தி சிறிய காயத்துடன் இருந்தபோது ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். ஆனால், இப்போது அவரது செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது நிச்சயமாக 2026 டி20 உலகக் கோப்பை வரை அவர் இந்திய அணியில் நீடிக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக மேலும் 3 போட்டிகள் மீதம் உள்ளன. அந்த போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்தினால் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஸ்பின்னராக இருப்பார். ரவி பிஷ்னோய் அவருக்கு போட்டியாக இருந்தாலும் அவர் சில போட்டிகளில் மட்டுமே விக்கெட்கள் வீழ்த்துகிறார். சில போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்.

இந்திய அணியின் ரவி பிஷ்னோய்-க்கான வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ரவி பிஷ்னோய் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வருண் சக்கரவர்த்தி முக்கிய வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரவி பிஷ்னோய் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் விக்கெட்களை மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன் மற்றும் ரையன் ரிக்கில்டன் ஆகியோரது விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தி இருந்தார். ரவி பிஷ்னோய் பந்து வீச்சாளர்களான பாட்ரிக் க்ரூகர், மார்க்கோ ஜான்சன் மற்றும் ஆண்டில் சைமலேன் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி தனது முக்கியத்துவத்தை பந்துவீச்சின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Story first published: Saturday, November 9, 2024, 9:59 [IST]
Other articles published on Nov 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+