Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: விராட் கோலி அதிரடி ஆட்டத்திற்கு கம்பீர் மீதான கோபம் காரணம் அல்ல.. விசயமே வேறு

ராஞ்சி:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி கொஞ்சம் அதிரடியை காட்டி விளையாடியது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இதில் ஏழு சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி பொதுவாக ரன்களை ஓடியும், பௌண்டரிகளையும் குறிவைத்து இன்னிங்சை கட்டமைப்பார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கொஞ்சம் ஆக்ரோஷம் கலந்து இருந்தது.

Virat kohli

இதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆட்டம் இழந்தவுடன் வழக்கம் போல் விராட் கோலி தனது பழைய ஆக்ரோஷத்தை வெளிக் காட்டினார் இதற்கு காரணம் கம்பீர் மீதான கோபம் தான் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் உண்மை அது கிடையாது. இதற்கு காரணம் தென்னாபிரிக்க அணி பயிற்சியாளர் கான்ராட் தான்.

டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. அப்போது கடைசி டெஸ்டில் ஐந்தாவது நாள் ஆட்டத்திற்கு முன்பு இந்திய வீரர்கள் மண்டியிட்டு கதற வேண்டும் என்று பேசி இருந்தார். இது விராட் கோலிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு பழி வாங்க தான் விராட் கோலி முதல் ஒரு நாள் போட்டியில் ஆக்ரோஷமாக இருந்தார் என்று தெரிகிறது.

இதனால் தான் பேட்டிங்கில் அதிக அளவு அவர் சிக்ஸர்களை அடித்து பதிலடி கொடுத்தார். மேலும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஆட்டம் இழந்த ஒவ்வொரு முறையும், தென்னாப்பிரிக்கா டிரெஸ்ஸிங் ரூம் நோக்கி விராட் கோலி கத்தினார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கான்ராட்டுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார்.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் நடக்க உள்ளது. தென்னாபிரிக்க வீரர்களும் போட்டியில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு பயத்தை காட்டினர். இதனால் இந்த ஒரு நாள் தொடர் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, December 1, 2025, 12:23 [IST]
Other articles published on Dec 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+