Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி.. டீம்ல இடம் இல்லை.. அப்படி ஓரமா போய் உட்காருங்க! சதம் அடித்த இளம் வீரரை கழட்டி விட்ட கோலி!

Recommended Video

India vs South Africa 2nd test | Vihari dropped | 2-வது டெஸ்டில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டார்-வீடியோ

புனே : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளார் கேப்டன் கோலி.

அதற்கு காரணம், அணியின் சமநிலை மற்றும் பிட்ச் தான் என்றாலும், கடந்த டெஸ்ட் தொடரில் அவர் சதம், அரைசதம் என அடித்து இருந்தார் அந்த இளம் வீரர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்றார்

டாஸ் வென்றார்

இரண்டாவது டெஸ்டில் ஆடுகளம் முதல் நாள் மட்டுமே பேட்டிங் செய்ய சிறப்பாக ஒத்துழைக்கும் என்ற நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

அப்போது பேசிய கோலி, அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல் - ரவுண்டராக அணியில் இருக்கும் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம், போட்டி நடைபெறும் புனே ஆடுகளம் மூன்றாம் நாளுக்குப் பின் மந்தமாக மாறி விடும். அப்போது சுழற் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடாது. வேகப் பந்துவீச்சாளர்களின் ரிவர்ஸ் ஸ்விங் தான் ஒரே தீர்வு.

கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்

கூடுதல் வேகப் பந்துவீச்சாளர்

எனவே, இந்திய அணியில் முதல் போட்டியில் இருந்த இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களோடு, கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சாளர் தேவை. அதனால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

ஹனுமா விஹாரி நீக்கம்

ஹனுமா விஹாரி நீக்கம்

உமேஷ் யாதவ்வை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் யாரை நீக்குவது என்ற சிக்கல் இருந்தது. ஆல் - ரவுண்டர் என அணியில் சேர்க்கப்பட்டு இருந்தாலும், ஹனுமா விஹாரி பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, அவரை நீக்கினார் கோலி.

அஸ்வின், ஜடேஜா பேட்டிங்

அஸ்வின், ஜடேஜா பேட்டிங்

அஸ்வின், ஜடேஜா பேட்டிங்கிலும் கை கொடுப்பார்கள் என்பதால் அவர்களோடு சேர்த்து அணியில் எட்டு பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். எனவே, விஹாரியை நீக்கினாலும் அது பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தாது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விஹாரி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விஹாரி

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹனுமா விஹாரி தன் முதல் டெஸ்ட் சதம், இரண்டு அரைசதம் என அடித்து பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தார்.

ரோஹித் வாய்ப்பை இழக்க காரணம்

ரோஹித் வாய்ப்பை இழக்க காரணம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மிடில் ஆர்டராக அணியில் இடம் கிடைக்காமல் போனதற்கு காரணம் ஹனுமா விஹாரி தான். அப்படி சிறப்பாக ஆடிய அவருக்கு, தென்னாப்பிரிக்க டெஸ்டில் அணியின் சம நிலை காரணமாக இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய அணி திட்டம்

இந்திய அணி திட்டம்

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஐந்து பேட்ஸ்மேன்கள், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், இரண்டு ஆல் ரவுண்டர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை கொண்டு ஆட உள்ளது.

இந்தியா அணி விவரம்

இந்தியா அணி விவரம்

இந்தியா அணி - ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, விரிதிமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி

Story first published: Thursday, October 10, 2019, 11:10 [IST]
Other articles published on Oct 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+