Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அதுல்ல.. 10 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.. 2014 டி20 ஃபைனலை ரிப்பீட் செய்த விராட் கோலி!

பார்படாஸ்: 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி 58 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 77 ரன்களை சேர்த்திருந்தார். தற்போது அதேபோன்ற இன்னிங்ஸை 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த வரும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியிலும் விராட் கோலி ரிப்பீட் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற 177 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 76 ரன்களை விளாசினார்.

t20 world cup IND vs SA

இந்த இன்னிங்ஸில் விராட் கோலி எதிர்கொண்ட முதல் 15 பந்துகளில் 21 ரன்களையும், 16 முதல் 30 பந்துகள் வரை 16 ரன்களையும், 31 முதல் 45 பந்துகள் வரை 11 ரன்களையும், 46 முதல் 59 பந்துகள் வரை 28 ரன்களையும் சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 140 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி பின்னர் 73.03 ஸ்ட்ரைக் ரேட்டில் குறைந்து, இறுதியாக 200.0 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு உயர்ந்துள்ளது.

விராட் கோலி ஆடியுள்ள இந்த இன்னிங்ஸும், 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு ஆடிய இன்னிங்ஸ்-ம் அச்சடித்தாற் போல் அமைந்துள்ளது. மிர்பூர் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் 58 பந்துகளில் 77 ரன்களை விராட் கோலி சேர்த்தார். அந்த போட்டியில் இலங்கை அணி எளிதாக இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதேபோல் இந்த இன்னிங்ஸில் விராட் கோலி 59 பந்துகளை எதிர்கொண்டு 76 ரன்களை சேர்த்திருக்கிறார். இதனால் 10 ஆண்டுகளில் விராட் கோலி தனது பேட்டிங் ஸ்டைலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியை போல் அல்லாமல், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி 7 இன்னிங்ஸ்களில் விளையாடி 75 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில், இன்றைய இன்னிங்ஸில் மட்டும் 76 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் கடைசியாக விராட் கோலி ஆடிய 10 இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 29, 2024, 22:19 [IST]
Other articles published on Jun 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+