For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாராலையும் அசைக்க முடியாது.. மீண்டும் நிரூபித்த கிங் கோலி.. டபுள் செஞ்சுரி அடித்து வெறியாட்டம்!

Recommended Video

Virat Kohli 254 runs vs South Africa | 7வது இரட்டை சதம் அடித்தார் கோலி-வீடியோ

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து பல சாதனைகளை முறியடித்தார்.

அதிலும் ஒரே பந்தில் இரட்டை சதம் மற்றும் டெஸ்டில் 7,000 ரன்கள் என இரண்டு மைல்கல்லை எட்டினார் கோலி.

கோலி ஆடிய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா நிலைகுலைந்து போனது. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 108, புஜாரா 58, ரஹானே 59 ரன்கள் குவித்தனர்.

இந்தியா டிக்ளர்

இந்தியா டிக்ளர்

ஜடேஜா அதிரடியாக 91 ரன்கள் குவித்தார். கோலி இரட்டை சதம் அடித்த நிலையில் இருக்க, இந்தியா 5 விக்கெட்கள் இழந்து 601 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்க்சை டிக்ளர் செய்தது.

கோலி ஆட்டம்

கோலி ஆட்டம்

இந்தப் போட்டியில் கேப்டன் கோலி நீண்ட நேரம் களத்தில் நின்று தன் 26வது சதம் கடந்தார். பின் அந்த சதத்தை இரட்டை சதமாக மாற்றி வெறியாட்டம் ஆடினார்.

ஆடித் தீர்த்தார்

ஆடித் தீர்த்தார்

கடந்த 10 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் கோலி சதம் அடிக்கவில்லை. அதை சேர்த்து வைத்து இந்தப் போட்டியில் ஆடித் தீர்த்தார் கோலி. எந்த கட்டத்திலும் தென்னாப்பிரிக்க அணியால் அவரை அழுத்தத்தில் வைத்திருக்க முடியவில்லை.

இரட்டை சதம்

இரட்டை சதம்

295 பந்துகளில் இரட்டை சதம் கடந்தார் கோலி. முதலில் படு நிதானமாக ஆடத் துவங்கிய கோலி சதம் அடித்த பின் கொஞ்சம் வேகம் எடுத்தார். முதல் இன்னிங்க்ஸ் முடியும் வரை ஆட்டமிழக்காமல் நின்றார் கோலி.

ஒரு சிக்ஸ் கூட இல்லை

ஒரு சிக்ஸ் கூட இல்லை

254 ரன்கள் அடித்து களத்தில் இருந்த கோலி 33 ஃபோர். 2 சிக்ஸ் அடித்து இருந்தார். இதில் முக்கியமாக இரட்டை சதம் அடிக்கும் வரை ஒரு சிக்ஸ் கூட அவர் அடிக்கவில்லை.

7வது இரட்டை சதம்

7வது இரட்டை சதம்

இந்த இரட்டை சதம் கோலியின் ஏழாவது இரட்டை சதம் ஆகும். இதன் மூலம், இந்திய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் கோலி.

7000 ரன்களை கடந்தார்

7000 ரன்களை கடந்தார்

மேலும், இரட்டை சதம் அடித்த அதே பந்தில் டெஸ்ட் போட்டியில் 7,000 ரன்களை கடந்து புதிய மைல்கல் சாதனை படைத்தார். மேலும், இந்திய அளவில் 7,000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் கோலி ஆவார்.

ரஹானேவுடன் நிதானம்

ரஹானேவுடன் நிதானம்

இந்தப் போட்டியில் ரஹானே, ஜடேஜாவுடன் கோலி அமைத்த கூட்டணி தான் போட்டியை இந்தியா வசமே வைத்து இருந்தது. ரஹானேவுடன் இணைந்து 178 ரன்கள் குவித்தார் கோலி.

ஜடேஜாவுடன் வெறியாட்டம்

ஜடேஜாவுடன் வெறியாட்டம்

ஜடேஜாவுடன் இணைந்து 225 ரன்கள் குவித்தார் கோலி. இந்த கூட்டணி கடைசி 12 ஓவர்களில் அதிரடி காட்டி தென்னாப்பிரிக்க அணியை திணற வைத்தது. ஜடேஜா 104 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார்.

Story first published: Friday, October 11, 2019, 16:41 [IST]
Other articles published on Oct 11, 2019
English summary
IND vs SA : Virat Kohli scored a double century againts South Africa. He also crossed 7,000 runs in tests.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+