Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா?

Recommended Video

குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா?

தரம்சாலா : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டியில் மழை குருக்கிடுமா? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டிக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களை தரம்சாலா மைதானத்தில் சந்தித்தார் கேப்டன் கோலி.

மழை பொழிவு

மழை பொழிவு

அந்த சந்திப்பு முடிந்து அவர் வெளியேறும் போது குடையை பிடித்துக் கொண்டு சென்றார். அந்த அளவுக்கு ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மைதானம் இருக்கும் பகுதியில் மழை கொட்டி வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை பொழிவு அதிகமாக உள்ளது.

மழை வருமா?

மழை வருமா?

இதைக் கண்ட பலரும், முதல் டி20 போட்டி நடக்குமா? அல்லது மழையால் பாதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். போட்டியின் போது சிக்கல் இருக்காது என்று தான் கூறப்படுகிறது.

ஆடுகளம்

ஆடுகளம்

கடந்த இரு நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஆடுகளம் மூடப்பட்டு உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா என இரு அணி வீரர்களும் உள் அரங்குகளில் பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுள்ளது.

இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை

போட்டி நடைபெறும் ஞாயிறு அன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. அதே சமயம், போட்டி நடக்கும் இரவு நேரத்தில் மழை இருக்காது என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பனித்துளி சிக்கல்

பனித்துளி சிக்கல்

மேலும், பின்னிரவில் காற்றில் பனித்துளி அதிகம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆடுகளம் மூன்று நாட்களாக வெயிலை பார்க்காமல், ஈரப்பதமாக இருக்கும் என்பது உறுதியாக தெரிய வருகிறது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்த சூழ்நிலையில், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம். காரணம், இரண்டாவதாக பந்துவீசும் அணி ஈரப்பதம் காரணமாக பந்து வீச திணறும். அது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும்.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

இரு அணிகளும் 2020 டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த டி20 தொடருக்கு தயார் ஆகி வருகின்றன. இந்திய அணி முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை 3 - 0 என டி20 தொடரில் வீழ்த்தி வெற்றி நடையுடன் இந்த தொடரை எதிர் கொள்ள உள்ளது.

அதிக இளம் வீரர்கள்

அதிக இளம் வீரர்கள்

இரு அணியிலும் பல இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச அனுபவம் குறைந்த வீரர்கள் என்றாலும், ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் சாதித்த வீரர்கள் என்பதால், போட்டிகள் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Sunday, September 15, 2019, 13:04 [IST]
Other articles published on Sep 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+