For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: இந்தியா - தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை போட்டி எத்தனை மணிக்கு? பிட்ச், பிளேயிங் 11 விவரம்

நவி மும்பை: 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணி தனது ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் இன்று (பிப்ரவரி 4) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. கடந்த 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதிய அதே இரண்டு அணிகள் இப்போது மீண்டும் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குக் களம் காணுகின்றன.

IND vs SA Warm-up at T20 World Cup 2026 Match Timing Pitch Report and Predicted Playing XI

ஒரேயொரு பயிற்சி ஆட்டம்

உலகக்கோப்பைத் தொடருக்குத் தயாராகும் வகையில் இந்திய அணிக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு வாய்ப்பு இதுதான். காயம் காரணமாகச் சில காலம் ஓய்வில் இருந்த வீரர்கள் மற்றும் அணியில் புதிதாக வாய்ப்புப் பெற்ற இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க இது ஒரு சிறந்த மேடையாகும். குறிப்பாக, சமீபத்தில் நியூசிலாந்துத் தொடரில் சதம் விளாசி கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஆகியோர் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.

மைதானம் மற்றும் வானிலை நிலவரம்

நவி மும்பையில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலை நேரத்தில் வெப்பநிலை குறையக்கூடும். இருப்பினும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வீரர்கள் சற்று சிரமப்படலாம். டி.ஒய்.பாட்டீல் மைதானத்தின் ஆடுகளத்தைப் பொறுத்தவரை, இது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் ஓரளவுக்குக் கைகொடுக்கும். ஆடுகளத்தில் ஆங்காங்கே புற்கள் காணப்பட்டாலும், பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க ஏதுவான மைதானமாக இது இருக்கும்.

நேருக்கு நேர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் இதுவரை 31 முறை டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 18 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச ஆடும் லெவன்

இந்தியா: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரிவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்க்யா.

நேரலையில் பார்ப்பது எப்படி?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் இந்தப் பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையில் காணலாம். மொபைல் மற்றும் லேப்டாப்பில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோஸ்டார் செயலியில் போட்டியை ரசிக்கலாம்.

Story first published: Wednesday, February 4, 2026, 7:57 [IST]
Other articles published on Feb 4, 2026
English summary
IND vs SA Warm-up at T20 World Cup 2026: Match Timing, Pitch Report, and Predicted Playing XI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+