For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: "வீட்டுக்கு கிளம்புங்க சஞ்சு".. வெறும் 20 பந்தில் சாம்சன் கேரியரை முடித்த இஷான் கிஷன்

நவி மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வுக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை அணியில் தனது தொடக்க வீரர் இடத்தை உறுதி செய்துள்ளதால், சஞ்சு சாம்சனின் டி20 எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷன் தொடக்க வீரராகக் களமிறங்கினார். கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

IND vs SA Warm up Ishan Kishan Blasts 53 Runs Off 20 Balls and almost ended Sanju Samson career

ஒரே ஓவரில் 29 ரன்கள்

குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே வீசிய 5வது ஓவரில் இஷான் கிஷன் வானவேடிக்கை காட்டினார். அந்த ஓவரில் மட்டும் இஷான் கிஷன் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட 3 இமாலய சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மாவும் ஒரு சிக்ஸர் அடிக்க, இந்தியாவுக்கு ஒரே ஓவரில் 29 ரன்கள் கிடைத்தன.

20 பந்துகளில் 53 ரன்கள்

தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன், குவேனா மபாகா வீசிய 5.4வது ஓவரில் மிட்-விக்கெட்டில் ஒரு சிக்ஸர் அடித்து தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். வெறும் 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்த அவர், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாமாகவே முன்வந்து 'ரிட்டயர்ட் அவுட்' முறையில் வெளியேறினார். 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் இதில் அடங்கும். பெவிலியன் திரும்பிய இஷான் கிஷனை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தட்டிக்கொடுத்து வரவேற்றார்.

முடிவுக்கு வந்த சஞ்சு சாம்சனின் வாய்ப்பு?

உலகக்கோப்பைக்கு முந்தைய இந்த முக்கியமான போட்டியில் இஷான் கிஷன் தனது திறமையை நிரூபித்துள்ளதால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடிப்பது கடினமாகியுள்ளது. இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே சஞ்சு சாம்சனுக்கு இனி வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. வயது மற்றும் எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொள்ளும்போது, சஞ்சு சாம்சனின் சர்வதேச டி20 பயணம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Story first published: Wednesday, February 4, 2026, 20:54 [IST]
Other articles published on Feb 4, 2026
English summary
IND vs SA: Ishan Kishan's explosive half-century in the 2026 T20 World Cup warm-up match against South Africa effectively seals his position as India's opener, leaving Sanju Samson's T20I future in jeopardy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+