Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - கோலி சிஷ்யனா? இல்லை கம்பீர் சிஷ்யனா? யாருக்கு வாய்ப்பு தருவார் சூர்யகுமார்

கெபேஹா : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று கெபேஹா நகரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வென்றால் தொடர்ந்து 12 போட்டிகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த சூழலில் கேகேஆர் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி இன்று ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டி20 போட்டிகள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து இந்தியா களமிறங்கியது.

ind vs sa suryakumar yadav hardik pandya

இதில் ரவி பிஸ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதனால் இரண்டாவது டி20 போட்டியில் அக்ச்சர் பட்டேல் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருப்பதால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் யாஷ் தயாலை அறிமுகப்படுத்துமா இல்லை ரமண்தீப் சிங் அறிமுகப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய யாஷ் தயால் பெரிய அளவில் சோபிக்காமல் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிவை நோக்கி சென்றது. இந்த நிலையில் தேர்வு செய்த ஆர் சி பி அணி அவருக்கு உற்ற துணையாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி யாஸ் தயாலுக்கு பக்கபலமாக இருந்து அவருடைய கேரியரை காப்பாற்றினார். இதன் மூலம் கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடி 15 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த தருணத்தில் விராட் கோலியின் சிஷ்யனாக இருக்கும் யாஷ் தயாலுக்கு இன்று ஆட்டத்தில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் என மூன்று பெரும் அணிக்கு பலத்தை கொடுப்பார்கள். எனினும் இந்த சுற்றுப்பயணத்திற்கு வராத கம்பீர் கே கே ஆர் அணியில் விளையாடிய ரமண்தீப் சிங் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேப்டன் சூரியகுமார் யாதவை கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரமண்தீப் சிங் அதிரடியாக பேட்டிங் செய்வார் என்பதால் இந்திய அணி விக்கெட்டுகள் இழந்தாலும் கீழ் வரிசையில் ரன்களை குவிக்க ஒரு வீரர் தேவை என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் விராட் கோலி சிஷ்யனுக்கு வாய்ப்பு கொடுப்பதா இல்லை கம்பீரின் சிஷ்யனுக்கு வாய்ப்பு கொடுப்பதா என்ற குழப்பத்தில் சூரிய குமாராலும் இருக்கின்றார்.

Story first published: Sunday, November 10, 2024, 8:30 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+