For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 போட்டியில் 15 விக்கெட்டு எடுத்த ஷமி.. தென்னாப்பிரிக்க தொடரில் ஏன் சேர்க்கவில்லை.. அஸ்வின் விளக்கம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சுப்மன் கில் தலைமையிலான அணியில் ரிஷப் பண்ட், துணை கேப்டன் ஆகவும் பும்ரா ஜடேஜா ராகுல், சிராஜ் போன்ற சீனியர் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி, தென்னாப்பிரிக்கா தொடரிலும் சேர்க்கப்படவில்லை. அவருடைய உடல் தகுதி குறித்து பல விவாதங்கள் எழுந்த நிலையில், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மூன்று ஆட்டங்களில் விளையாடி உள்ள சமி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Ashwin on shami

இதில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும். சமி தன்னுடைய உடல் தகுதி மற்றும் பார்மை நிரூபித்த பிறகும் தென்னாப்பிரிக்கா தொடருக்கு சேர்க்கப்படவில்லை என்பது பல விவாதங்களை ஏற்படுத்தியது.இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், சமி 15 விக்கெட் எடுத்திருக்கலாம். அவர் ஒரே போட்டியில் 20 ஓவர்கள் கூட வீசி இருக்கலாம்.

ஆனால் தேர்வு குழுவினரின் கண்களில் அது முக்கியம் கிடையாது. ரஞ்சிப் போட்டியில் விளையாடும் போது பந்து வீசும் அணி 90 ஓவர் வரை ஒரு நாளில் நிற்க வேண்டும். அப்போது சமி 90 ஓவர் முழுமையாக நின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஞ்சிப் போட்டியின் போது சமி ட்ரெஸ்ஸிங் ரூமுக்கும் மைதானத்திற்கும் சென்று சென்று வந்தார்.

தனது ஓவரை முடித்துவிட்டு டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றால் இதையெல்லாம் தேர்வு குழுவினர் கவனிப்பார்கள். இதன் மூலம் சமியின் உடல் தகுதி இன்னும் 100 சதவீதத்தை எட்டவில்லை என்பதே பொருள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும்போது நாம் அடிக்கடி இதுபோல் ஓய்வு அறைக்கு சென்று கொண்டு வர முடியாது.

இதையெல்லாம் காரணமாக வைத்து தான் ஷமியை தேர்வு குழுவினர் புறக்கணித்திருக்கலாம் என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அஸ்வினின் இந்த விளக்கத்தை நிராகரித்துள்ள ரசிகர்கள் பிசிசிஐயின் ஊதுகுழலாக அஸ்வின் செயல்படுகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அஸ்வின் சர்வதேச போட்டியில் விளையாடும் போது 90 ஓவர் வரை களத்தில் நின்றதில்லை என்றும் அவர் இப்படி ஒரு விளக்கத்தை அளிக்கலாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்கவில்லை என்றாலும் ஒரு நாள் மட்டும் டி20 கிரிக்கெட்டில் ஏன் சமியை சேர்க்கவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Story first published: Wednesday, November 5, 2025, 22:27 [IST]
Other articles published on Nov 5, 2025
English summary
Ind vs Aus- Why Mohammed shami not included in Test team reason revealed by R Ashwin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+