For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தயவுசெய்து மண்ணை அள்ளி போட்டுடாதீங்க கோலி.. இந்த திட்டம் வேலைக்கே ஆகாது.. பதறும் விமர்சகர்கள்!

Recommended Video

India vs South africa T20 : பேட்டிங் வரிசையில் அதிரடி மற்றம்?.. பதறும் விமர்சகர்கள்!

மும்பை: கேப்டன் கோலியின் புதிய திட்டம் ஒன்று இந்திய அணிக்கு சரிப்பட்டு வராது, அணியின் பந்துவீச்சுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளது.

இந்த டி20 தொடரில் இந்திய அணி ஒன்பது பேட்ஸ்மேன்கள் கொண்ட அணியுடன் களமிறங்க உள்ளது என்ற திட்டத்தை கோலி வெளிப்படையாகவே பேட்டியில் கூறினார்.

விவாதம்

விவாதம்

கோலி சொன்ன அந்த திட்டம் விமர்சகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. சிலர் இந்த முடிவை வரவேற்றாலும், சிலர் இது தேவையே இல்லாத ஒன்று. எதற்கு ஒன்பது பேட்ஸ்மேன்கள் அதிகபட்சம் ஏழு பேட்ஸ்மேன்கள் போதும் என அதற்கு விளக்கமும் அளித்து வருகின்றனர்.

கோலி என்ன சொன்னார்?

கோலி என்ன சொன்னார்?

பல முன்னணி அணிகள், குறிப்பாக இங்கிலாந்து, தங்கள் டி20 அணிகளில் அதிக பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. எட்டு, ஒன்பது பேட்ஸ்மேன்கள் வரை பேட்டிங் ஆட முடியும் என்பதால் அந்த அணியினர் அதிரடியாக ரன் குவிக்கின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார் கோலி.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

ஒன்பது பேட்ஸ்மேன்கள் ஆடுவது சாத்தியமா? பந்துவீச்சை சமாளிப்பது எப்படி? என்ற கேள்விகளுக்கு விடையாக இருப்பது ஆல் - ரவுண்டர்கள் தான். அணியில் மூன்று, நான்கு ஆல் ரவுண்டர்களை இடம் பெறச் செய்வதன் மூலம், இந்த திட்டம் சாத்தியம் ஆகும்.

யார் இடம் பெறுவர்?

யார் இடம் பெறுவர்?

தற்போது உள்ள இந்திய டி20 அணியில், உத்தேசமாக இந்த 11 வீரர்கள் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது - ரோஹித் சர்மா, தவான், கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி.

முழு நேர பந்துவீச்சாளர்கள்

முழு நேர பந்துவீச்சாளர்கள்

இவர்களில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர் மட்டுமே முழு நேர பந்துவீச்சாளர்கள். இருந்தாலும், ஹர்திக், க்ருனால், ஜடேஜா, சுந்தர் என நான்கு ஆல் - ரவுண்டர்களும் பந்து வீசுவார்கள்

பந்து வீச்சுக்கும் சிக்கல் இல்லை

பந்து வீச்சுக்கும் சிக்கல் இல்லை

இந்த இந்திய அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பந்துவீச்சுக்கு சிக்கல் இல்லை. அதே சமயம், ஐந்து முழு நேர பேட்ஸ்மேன்கள் தவிர்த்து, நான்கு ஆல் - ரவுண்டர்களை சேர்த்து ஒன்பது பேட்ஸ்மேன்களும் கிடைத்து விடுவார்கள்.

சிறந்த வீரர்கள் புறக்கணிப்பு

சிறந்த வீரர்கள் புறக்கணிப்பு

ஆனால், இந்த திட்டத்தால் சிறந்த பந்துவீச்சாளர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, இதற்கு முன் டி20 அணியில் சுழற் பந்துவீச்சாளர்களாக வலம் வந்த குல்தீப் யாதவ், சாஹல் அணியில் இடம் பெறவில்லை. சாஹல் நல்ல பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

9 பேட்ஸ்மேன்கள் அவசியமா?

9 பேட்ஸ்மேன்கள் அவசியமா?

பந்துவீச்சாளர்கள் புறக்கணிப்பு ஒருபுறம் இருக்க, டி20 அணிக்கு ஒன்பது பேட்ஸ்மேன்கள் அவசியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு ஆறாம் அல்லது ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்யும், அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பண்டியாவையே சிலர் உதாரணம் காட்டுகிறார்கள்.

ஹர்திக் பண்டியா கதை

ஹர்திக் பண்டியா கதை

ஹர்திக் பண்டியா 66 ஐபிஎல் போட்டிகளில் 61 இன்னிங்க்ஸ் பேட்டிங் வாய்ப்பை பெற்றுள்ளார். அதே சமயம், இந்திய அணியில் 38 சர்வதேச டி20 போட்டிகளில் 24 இன்னிங்க்ஸ் மட்டுமே பேட்டிங் ஆடி உள்ளார்.

விமர்சகர்கள் கருத்து

விமர்சகர்கள் கருத்து

ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்யும் ஹர்திக் பண்டியாவுக்கே பேட்டிங் வாய்ப்பு அதிகம் கிடைக்காத நிலையில் எதற்கு அணியில் ஒன்பது பேட்ஸ்மேன்கள்? இது பந்துவீச்சில் பாதிப்பாக அமையும். கூடுதல் ஆல் ரவுண்டர்களை விடுத்து, சிறந்த பந்துவீச்சாளர்களை ஆட வைக்கலாமே என கேட்கிறார்கள் விமர்சகர்கள். கேப்டன் கோலி தான் பதில் சொல்ல வேண்டும்.

Story first published: Wednesday, September 18, 2019, 11:43 [IST]
Other articles published on Sep 18, 2019
English summary
IND vs SA : Will India’s new plan to have deep batting order become successful?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+