For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய மகளிர் அணியில் அறிமுகமான 17 வயது தமிழக வீராங்கனை.. யார் இந்த கமாலினி?

திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான 5வது சர்வதேச டி20 போட்டியில், தமிழகத்தின் 17 வயது இளம் வீராங்கனையான கமாலினி இந்திய அணிக்காக அறிமுகமாகி தனது கனவை நிஜமாக்கினார். அவருக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அறிமுக தொப்பியை வழங்கினார். இதன் மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டியில் விளையாடும் 90வது வீராங்கனை என்ற பெருமையை கமாலினி பெற்றார்.

இடது கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்வுமனான கமாலினி, லெக்-ஸ்பின் பந்துவீசவும் வல்லவர். இவர் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்றார். நடப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்த இவர், கடந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, எட்டு ஆட்டங்களில் 311 ரன்கள் குவித்தார்.

G Kamilini

அத்துடன், 19 வயதுக்குட்பட்டோர் முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா 'பி' அணிக்காக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக 79 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இந்த ஆண்டு, நிக்கி பிரசாத் தலைமையில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் கமாலினி இடம்பெற்றார்.

உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 143 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் அடித்தவர்களில் மூன்றாம் இடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்தது அவரது தனிச்சிறப்புமிக்க ஆட்டமாகும்.

உலக சாம்பியன் ஆவதற்கு முன்னரே 2025 மகளிர் பிரீமியர் லீக் (WPL) வீரர்கள் ஏலத்திலும் கமாலினி கவனத்தை ஈர்த்தார். மும்பை இந்தியன்ஸ் இவரை ரூ. 1.60 கோடிக்கு ஒப்பந்தம் செய்து, அபார நம்பிக்கை வெளிப்படுத்தியது. 2025 பிப்ரவரியில், வதோதராவில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக WPL-ல் அறிமுகமான கமாலினி, லீக் வரலாற்றிலேயே இளம் அறிமுக வீராங்கனை ஆனார்.

16 வயது 213 நாட்களில், உலக அளவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஃபிரான்சைஸ் T20 அணிகள் அனைத்திலும் களமிறங்கிய இளம் வீராங்கனை என்ற சாதனையை இவரே படைத்தார். 2025 WPL தொடரில் 9 போட்டிகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆண்டு சீனியர் மகளிர் T20 கோப்பையில் தமிழக அணிக்காக தொடக்க வீராங்கனையாக 110 ஸ்ட்ரைக் ரேட்டில் 297 ரன்கள் (தொடரில் ஆறாவது அதிகபட்சம்) குவித்தார். செவ்வாய்க்கிழமை அன்று இலங்கை அணிக்கு எதிரான 5வது T20 போட்டியில் ஸ்மிருதி மந்தனாவிற்குப் பதிலாக இந்திய அணியில் இவர் இடம்பிடித்தார்.

Story first published: Tuesday, December 30, 2025, 23:18 [IST]
Other articles published on Dec 30, 2025
English summary
Ind vs sl - 17 Year old Tamilnadu Kamalini made T20 International debut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+