ஆட்டத்தை மாற்றிய அந்த ஒரு ஓவர்... திகைத்து நின்ற இலங்கை வீரர்கள்.. குல்தீப் - சாஹல் கம்பேக்!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் போட்ட ஒரே ஓவரில் இலங்கை அணி கதிகலங்கிவிட்டது.
Recommended Video
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஓப்பனிங்
இதனையடுத்து முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ - மினோத் பனுக்கா ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களை சேர்த்திருந்தனர்.

முதல் விக்கெட்
பின்னர் பவுலிங்கிற்கு வந்த யுவேந்திர சாஹல், தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஃபெர்னாண்டோவை (32) வீழ்த்தி அசத்தினார். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களிலேயே விக்கெட் இன்றி சற்று கவலையில் இருந்த இந்திய வீரர்களுக்கு சாஹலின் விக்கெட் நம்பிக்கை கொடுத்தது.

குல்தீப்
பின்னர் களமிறங்கிய பனுக்கா ராஜபக்சவும், மினோத் பனுக்காவுடன் சேர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வந்த சூழலில் குல்தீப் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி அசத்தினார். அவர் வீசிய 16வது ஓவரில் மினோத் பனுக்கா 27 ரன்களுக்கும், பனுக்கா ராஜபக்ச 24 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர்.

சரிவில் இலங்கை அணி
முதல் விக்கெட்டிற்கு 49 ரன்களை சேர்த்து வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி 89 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. குல்தீப், சாஹலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததை பார்த்த இலங்கை வீரர்கள் திகைத்தனர். தற்போது சரிவில் இருக்கும் அந்த அணியை மீட்க சரித் அசலங்கா மற்றும் கேப்டன் தசுன் சனகா போராடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications