For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SL, 1st ODI Live: முதல் ஒருநாள் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது? - முழு விவரம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி எங்கு, எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Recommended Video

IND vs SL 1st ODI: Predicted Playing 11 | OneIndia Tamil

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த தொடர் தொடங்கவுள்ளது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஓரளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது. காரணம், இந்திய அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் அணியின் கோச் ராகுல் டிராவிட்.

 புதிய தேதிகள்

புதிய தேதிகள்

இதில் முதலில் ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த தொடர், இலங்கை அணியில் பரவிய கொரோனா காரணமாக, ஜுலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.

 டிராவிட் பயிற்சியில்

டிராவிட் பயிற்சியில்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுகிறார்.

 எங்கு எப்போது?

எங்கு எப்போது?

இந்நிலையில், நாளை தொடங்கும் இப்போட்டி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இலங்கை vs இந்தியா முதல் ஒருநாள் போட்டி எப்போது தொடங்குகிறது?

முதல் ஒருநாள் போட்டி ஜூலை 18 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது

இலங்கை vs இந்தியா முதல் ஒருநாள் போட்டி எங்கே நடைபெறுகிறது?

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இலங்கை vs இந்தியா முதல் ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் என்ன?

இந்திய நேரப்படி, நாள் 03:00 மணிக்கு போட்டி தொடங்கும்.

இலங்கை vs இந்தியா முதல் ஒருநாள் போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகிறது?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். தமிழில் பார்க்க SONY TEN 4 & SONY TEN 4 HD சேனலை தேர்வு செய்யலாம்.

இலங்கை vs இந்தியா முதல் ஒருநாள் போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை எவ்வாறு பார்ப்பது?

SonyLIV ஆப் and வெப்சைட்டில் இப்போட்டியை நேரடியாக காணலாம். தவிர, நமது மைக்கேல் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நேயர்கள் காண முடியும்.

 பிளேயின் லெவன்

பிளேயின் லெவன்

SL vs IND 1st ODI, India probable playing XI against Sri Lanka: ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் (wk), சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

SL vs IND 1st ODI, Sri Lanka probable playing XI against India: பதும் நிசங்கா, சரித் அசலங்கா, தாசுன் ஷானகா (c), வணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Story first published: Saturday, July 17, 2021, 15:42 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
IND vs SL 1st ODI When and Where to Watch - இந்தியா, இலங்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+