Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. நட்சத்திர வீரரை களமிறக்குகிறார் டிராவிட்.. ரகசியத்தை கசியவிட்ட தவான்!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர வீரர் ஒருவர் மிடில் ஆர்டரில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்த கேள்விகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

இந்திய அணியின் ஓப்பனிங்கை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் களமிறங்குவார் என்பது தெரிந்ததே. அவருடன் மற்றொரு ஓப்பனிங் வீரராக இளம் வீரர் பிரித்வி ஷா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. தவான் மற்றும் பிரித்வி ஷா இருவரும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் ஜோடி சேர்ந்து அசத்தியுள்ளதால், அவர்கள் மீது டிராவிட் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

தவானின் கருத்து

தவானின் கருத்து

இந்நிலையில் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் வீரர் குறித்து கேப்டன் ஷிகர் தவானே தகவல் கொடுத்துள்ளார். 3வது வீரராக அனுபவ வீரர் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்பதை அவர் சூசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சூர்யகுமார் யாதவ் சிறந்த வீரர். உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் அவரின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இலங்கை தொடரில் நிச்சயம் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். நல்ல ஃபார்மில் உள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த ஒருநாள் போட்டிகள், எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. இந்த இளம் அணியை தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறோம். அனைத்து வீரர்களும் தேசத்திற்காக விளையாட வாய்ப்பு பெறுவார்கள். அவர்களின் திறமைகளை நிரூபிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Krunal Pandya Hugs Charith Asalanka! Is It 'Dravid Effect'? | IND vs SL 1st ODI | OneIndia Tamil
சிறந்த ஃபார்ம்

சிறந்த ஃபார்ம்

ஐபிஎல் போட்டியில் நீண்ட வருடங்களாக சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் தான் சர்வதேச வாய்ப்பு கிடைத்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 87 ரன்களை விளாசினார். இந்நிலையில் தற்போது தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 18, 2021, 16:54 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+