Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL 1st ODI: போட்டியை டிவியில் இலவசமாக பார்க்க என்ன செய்யணும்? - முழு விவரம் இங்கே

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியை எப்படி, எங்கு, எப்போது பார்க்கலாம்?

Recommended Video

India - Srilanka தொடர் ரத்தாகிறதா? BCCI என்ன செய்யும் | Oneindia Tamil

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.

 3 ஒருநாள், 3 டி20

3 ஒருநாள், 3 டி20

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 பயிற்சியாளர் டிராவிட்

பயிற்சியாளர் டிராவிட்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 எந்த சேனலில் பார்க்கலாம்?

எந்த சேனலில் பார்க்கலாம்?

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியை எங்கு, எப்பொழுது, எப்படி பார்க்கலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். முதல் போட்டி வரும் ஜுலை 13ம் தேதி தொடங்குகிறது. கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில், இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. Sony SIX HD/SD வாயிலாக ஆங்கில வர்ணனையில் போட்டியை காணலாம். அதேசமயம், SONY TEN 4 சேனலில் தமிழில் கமெண்ட்ரி காணலாம்.

 லைவ் கமெண்ட்ரி

லைவ் கமெண்ட்ரி

அதேபோல், இலவசமாக இப்போட்டியை பார்க்க வேண்டுமெனில், தூர்தர்ஷனை தேர்வு செய்யலாம். இதன் மூலம், கட்டணம் செலுத்தி சோனி சேனல்களில் பார்ப்பதை தவிர்த்து, இலவசமாக பார்க்க விரும்புவோர் தூர்தர்ஷன் சேனலில் கண்டுகளிக்கலாம். அதுமட்டுமின்றி, நமது தமிழ் மைக்கேல் தளத்திலும், லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் கமெண்ட்ரியை ரசிகர்கள் காண முடியும்.

Story first published: Friday, July 9, 2021, 17:27 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+