Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் XI என்ன? சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?

பாலக்கலே : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ஆம் தேதி பாலக்கல்லேவில் தொடங்குகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் தலைமை தாங்கி இருக்கிறார்.

இதனால் இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் இந்த போட்டியின் மூலம் தொடங்குகிறது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ind vs sl india squad cricket vs Gautam Gambhir

தொடக்க வீரராக இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் செயல்படுவார். அவருக்கு ஜோடியாக அதிரடி இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் விளையாடுவார். நம்பர் மூன்றாவது வீரராக கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடுவார், நம்பர் நான்காவது இடத்தில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ரிங்கு சிங் என இரண்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ரிஷப் பன்ட் ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேன் ஆக இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறாவது வீரராக அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடக்கூடும்.

ஏழாவது வீரராக அக்சர் பட்டேல் இடம் பெறுவார். இதன் அடுத்து 8வது வீரராக ரவி பிஷ்னாய் அணியில் இடம் பிடிப்பார். இதனை அடுத்து 9, 10 ,11 ஆகிய இடத்தில் மூன்று வேக பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள். இதில் முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், கலில் அகமது ஆகியோருக்கு இடம் கிடைக்கலாம்.

ஒருவேளை ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர் வீசுவார் என்றால் கலீல் அஹ்மது நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் சிவம் துபே அல்லது ரிங்கு சிங் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று அக்சர் பட்டேல் இருப்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான். இதேபோன்று நடுவரிசையில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

பிளேயிங் லெவன் உத்தேசம் : 1. சுப்மன் கில், 2, ஜெய்ஸ்வால், 3, சூர்யகுமார், 4, ரிஷப் பண்ட், 5, சஞ்சு சாம்சன்/ ரிங்கு சிங்/ சிவம் துபே, 6 ஹர்திக் பாண்டியா, 7, அக்சர் பட்டேல், 8, முகமது சிராஜ், 9,ஆர்ஸ்தீப் சிங், 10, ரவி பிஸ்னாய், 11, கலீல் அகமது ( கலீல் அகமது இல்லை என்றால் சாம்சன், ரிங்கு சிங் அல்லது சாம்சன், சிவம் துபே ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இருக்கக்கூடும்)

Story first published: Thursday, July 25, 2024, 12:53 [IST]
Other articles published on Jul 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+