Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்சை விட்டதால் வந்த கஷ்டம்..இலங்கைக்கு சரியான சவால்.. இஷான், ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் விளாசினர்.

ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

அறிமுக வீரராக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த போட்டியிலிருந்த 6 இந்திய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் இல்லை.

50 ரன்கள்

50 ரன்கள்

தொடக்கம் முதலே இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். பாரபட்சமின்றி, அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது வழக்கமான ஷாட்களை ஆடி, பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். கருணரத்னே வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 5.2 வது ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது.

அரைசதம்

அரைசதம்

இஷான் கிஷன் 43 ரன்கள் அடித்திருந்த போது இலங்கை வீரர்கள் ஒரு கேட்சை தவறவிட்டு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். 30 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். ரோகித் சர்மாவும் தனது அதிரடிய காட்டியதால் 10 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இந்த ஆட்டத்தில் ரோகித் 44 ரன்கள் அடித்தன் மூலம் 3304 ரன்களை குவித்து . சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இஷான் கிஷன். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

இதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும், பின்னர் அவரும் வான வேடிக்கை காட்டினார். இதன் மூலம் அவர் 25 பந்துகளில் அரைசதம் விளாச, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இலங்கை வீரர்கள் முக்கிய கேட்சை விட்டது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

Story first published: Thursday, February 24, 2022, 21:01 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+