Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒவ்வொரு அடியும் இடி..!! தோனியே செய்யாத சாதனையை படைத்த இஷான் கிஷன்..!! ரோகித் நம்பிக்கை வீண்போகல

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இஷான் கிஷன் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை. ரன்களை அடித்தாலும் அதற்கு அதிக பந்துகளை எடுத்து கொண்டார்.

இவருக்கா மும்பை அணி, 15 கோடிக்கு மேல் வழங்கியது என்று ரசிகர்கள் சிலரும் விமர்சித்து வந்தனர். அதற்கு எல்லாம் இன்று பதிலடி தந்தார் இஷான் கிஷன்.

50 ரன்கள்

50 ரன்கள்

தொடக்கம் முதலே இஷான் கிஷன் அதிரடியை காட்டினார். பாரபட்சமின்றி, அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது வழக்கமான ஷாட்களை ஆடி, பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். கருணரத்னே வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 5.2 வது ஓவரிலேயே இந்திய அணி 50 ரன்களை எட்டியது.

அரைசதம்

அரைசதம்

குறிப்பாக சமிரா 146 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை சிக்சருக்கு விரட்டினார் இஷான் கிஷன். இஷான் கிஷன் 43 ரன்கள் அடித்திருந்த போது இலங்கை வீரர்கள் ஒரு கேட்சை தவறவிட்டு, அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினர். 30 பந்துகளில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். ரோகித் சர்மாவும் தனது அதிரடிய காட்டியதால் 10 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

அதே போன்று லகிரா குமாரா வீசிய 16வது ஓவரின் முதல் 3 பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை விரட்டினார் இஷான் கிஷன். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.

Recommended Video

எனக்கு சுத்தமா புடிக்கல.. வீரர்களின் காயம் குறித்து Rohit Sharma அதிருப்தி
இஷான் கிஷன் அசத்தல்

இஷான் கிஷன் அசத்தல்

இதன் மூலம் இஷான் கிஷன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ரிஷப் பண்ட் 65 ரன்கள் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. தோனி 85 இன்னிங்ஸ் விளையாடி 2 முறை தான் அரைசதம் அடித்தார். ஆனால் இஷான் கிஷன் 9 இன்னிங்சில் 2 முறை அரைசதம் விளாசியுள்ளார்.

Story first published: Thursday, February 24, 2022, 21:06 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+