Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 உலக சாதனை படைக்க போகும் ரோகித்..! இன்றைய ஆட்டத்தில் இதை செய்தால் போதும்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு

லக்னோ: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Recommended Video

IND vs SL : Rohit Sharma will sacrifice these two players | Oneindia Tamil

இந்தப் போட்டியில் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் அகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தீபக் சாஹர், சூர்ய குமார் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

937 ரன்கள்

937 ரன்கள்

இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் 2 உலக சாதனை படைக்க உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, இதுவரை 25 இன்னிங்சில் விளையாடி 937 ரன்களை விளாசியுள்ளார். சராசரியாக 40 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 156 ஆகும்.

அதிவேக ஆயிரம்

அதிவேக ஆயிரம்

இந்த நிலையில், ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 63 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிவேகமாக அயிரம் ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார். தற்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்த சாதனையை வகித்து வருகிறார். இந்தப் போட்டியில் மேலும் ஒரு உலக சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 37 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது நியூசிலாந்து வீரர் குப்தில் 3299 ரன்களும், விராட் கோலி 3296 ரன்களும், ரோகித் சர்மா 3263 ரன்களும் அடித்து உள்ளனர்.

அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

விராட் கோலி, இந்த தொடரில் விளையாடவில்லை. குப்திலுக்கும் தற்போது எந்த டி20 போட்டியும் இல்லை. இதனால் இலங்கைக்கு எதிரான 3 போட்டியில் ரோகித் சர்மா 37 ரன்களை எளிதாக கடந்து இந்த சாதனையை படைக்க முடியும். இலங்கைக்கு எதிராக இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 289 ரன்களை குவித்துள்ளார். இதில் 1 சதம் அடங்கும். ஆனால் சராசரி வேறும் 22.76 ரன்கள் தான். இதனை அதிகரிக்கும் கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Story first published: Thursday, February 24, 2022, 17:49 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+