Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL : டீமில் இடமில்லை.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி முடிவு.. சிவம் துபே, சுந்தர் நீக்கம்

பல்லேகேலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிஎஸ்கே வீரர் மற்றும் ஒரு தமிழக வீரருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ரோஹித் சர்மாவுக்கு பின் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் யார் யாருக்கு அணியில் இடம் கொடுப்பார் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியின் டாஸ் நிகழ்வின்போது சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சிவம் துபேவை நீக்கியதாக அறிவித்தார். மேலும், தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. சஞ்சு சாம்சன், கலீல் அகமது ஆகியோருக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

IND vs SL india Sri lanka

இந்தப் போட்டியில் இலங்கை அணி டாஸில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்வு செய்தது., அதன் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி டாஸ் வெல்லாதது குறித்து பேசினார். "இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்வது நன்றாகவே இருக்கும் என நினைக்கிறேன். கவுதம் கம்பீருடன் நீண்ட நாட்களாக நான் நல்ல உறவில் இருக்கிறேன். அதனால் அவருடன் பணியாற்றுவது நன்றாக உள்ளது. இந்த போட்டியில் சிவம் துபே, சஞ்சு சாம்சன், கலீல் அஹமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய நான்கு வீரர்களும் இடம் பெறவில்லை." என்றார் சூர்யகுமார் யாதவ்.

இதை அடுத்து சிஎஸ்கே-வை சேர்ந்தவர் என்பதால் சிவம் துபேவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்யத் துவங்கினர். மேலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறாதது குறித்து தமிழக ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியா (பிளேயிங் லெவன்): சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

இலங்கை (பிளேயிங் லெவன்): பாத்தும் நிசங்கா, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா(கேப்டன்), தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்கா

Story first published: Saturday, July 27, 2024, 19:04 [IST]
Other articles published on Jul 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+