574 ரன்கள் அடித்தும் வெற்றி கஷ்டம்.. மட்டமான பிட்ச் போட்டு சொதப்பிய பிசிசிஐ.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்
முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளத்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரவிந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

எடுப்படவில்லை
முகமது ஷமி வீசிய முதல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே கருணரத்னே பவுண்டரி விளாசினார். முகமது ஷமி வீசிய பந்துகள் ஆடுகளத்தில் சுத்தமாக எடுப்படவில்லை. இதனையடுத்து, பும்ராவை பந்துவீச ரோகித் அழைத்தார்.அவரது பந்துவீச்சும் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவில்லை.

பந்துவீச்சில் மாற்றம்
இதனையடுத்து, 4வது ஓவரின் முடிவிலேயே ரோகித் சர்மா சுழற்பந்துவீச்சாளரை பந்து வீச அழைத்தார். இதனையடுத்து அஸ்வின் வீசிய பந்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பந்தும் பெரிதாக திரும்பவில்லை. இதனால் இலங்கை வீரர்கள் சுலபமாக ரன்களை சேர்த்து வருகின்றனர்.

ஒரே ஆயுதம்
ஆட்டத்தின் முதல் நாளில் பெரும்பாலான பகுதியில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு கொஞ்சமாவது இரக்கம் காட்டியது. ஆனால் தற்போது சுழற்பந்துவீச்சாளர்களும் கஷ்டப்பட்டால் தான் விக்கெட்டை எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை பந்து பழையதாகி ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களாவது விக்கெட் எடுக்க முடியும்.

டிராவை நோக்கி..
இல்லையேனில் இந்த ஆட்டம் டிராவை நோக்கி தான் செல்லும். 20 விக்கெட்டுகளையும் எடுக்க பந்துவீச்சாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதனால் இந்தப் போட்டி 5 நாள் முழுமையாக நடைபெறும்போட்டி டிராவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆடுகளம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications