IND vs SL: கேஎல் ராகுல், படிக்கல் அபார ஆட்டம்.. இந்திய அணி ரன் குவிப்பு.. இலங்கை தடுமாற்றம்
காலே: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் காலே சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 600-வது டெஸ்ட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் மற்றும் கேஎல் ராகுல் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் தடுத்து நிதானமாக விளையாடினர்.

முதல் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.மழை மற்றும் மதிய உணவு நேர இடைவெளிக்கு பின் ராகுல் மற்றும் தேவுதத் படிக்கல் ஆகியோர் தங்களது பேட்டிங் தொடர் இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.
ரன் குவிப்புக்கு ஆடுகளம் சாதகமாக இருப்பதால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 400 ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாக விளையாடிய படிக்கல் 81 பந்துகளில் அரை சதம் கடந்தார். இதில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். தொடக்க வீரர் ராகுல் 127 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் சேர்த்தார்.இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும் .தொடர்ந்து இருவரும் அபாரமாக விளையாடி வருவதால் இருவீரர்களும் சதத்தை நெருங்கி உள்ளனர்.
ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் வேலையில் மழையும் அடிக்கடி குறுக்கிடுவதால், இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய இலக்கை குவித்துவிட்டு, இன்னிங்ஸ் வெற்றியை குறி வைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால், போட்டி டிரா ஆவதை விட வெற்றியே முக்கியம்.


Click it and Unblock the Notifications

